ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. ஜப்பானிய உணவுகள், நீச்சல் குளத்தில் பார்ட்டி.. செம ரிச்சான கொண்டாட்டம்
உதய்பூர்: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். நேற்றுதான் அவர்கள் தங்களது திருமணத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்ட கையோடு குடும்பம் சகிதமாக உதய்பூருக்கு சென்றடைந்தார்கள். இந்நிலையில் நேற்று மாலையிலிருந்தே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. அதுகுறித்த புகைப்படங்களையும் அவர்கள் ஷேர் செய்திருக்கிறார்கள்.
இந்திய திரையுலகமே எதிர்பார்த்திருக்கும் திருமணமாக மாறியிருக்கிறது ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம். கடந்த வருடத்தில் தங்களது வீட்டில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அவர்கள் நாளை மறுதினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மொமெண்டோஸ் மாளிகையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் பல சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிகிறது.
உறுதி செய்த ஜோடி: கடந்த ஒரு மாதமாகவே இவர்களது திருமணம் பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் இதுதொடர்பான இரண்டு பேரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காமல் இருந்தார்கள். சூழல் இப்படி இருக்க நேற்று இரண்டு பேருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்து தங்களது திருமணத்தை உறுதி செய்தார்கள். அவர்கள் தங்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெயரை சேர்த்து'VIROSH' திருமணம் என்று பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உதய்பூர் சென்றடைந்த ஜோடி: திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அவர்கள் நேற்று தங்கள் குடும்பத்துடன் உதய்பூருக்கு சென்றடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு சூப்பரனா வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். அவர்களது திருமணம் நடக்கவிருக்கும் ஐடிசி மாளிகைக்கு ஒரு நாளைக்கு 91,000 ரூபாய் வாடகை ஆகும். அந்த மாளிகை ஆரவல்லி மலை தொடர்களுக்கு நடுவே அமைந்து பார்க்கவே ரம்யமாக இருக்கும்.
ஆரம்பித்த கொண்டாட்டம்: நேற்று மாலையிலிருந்தே திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி நேற்று மாலை நேரத்தில் சூப்பரான கேண்டில் லைட் டின்னர் விருந்து வைக்கப்பட்டது. அந்த விருந்தில் ஜப்பானிய வகை உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அந்த விருந்து மேசை இளஞ்சிவப்பு லில்லி மலர்கள், பச்சை நிற ஹைட்ரேன்ஜியா மலர்களால் அருமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு இருக்கையிலும் VIROSH எனவும் எம்ப்ராயிடிங் செய்யப்பட்டிருந்தத
நீச்சல் குளத்தில் பார்ட்டி: அதுமட்டுமின்றி நீச்சல் குளத்துக்குள் வைத்து பார்ட்டியும் நடத்தப்பட்டது. மேலும் விஜய் தேவரகொண்டா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீச்சல் குளத்தில் வாலிபாலும் விளையாடினார். அதேபோல் ஏகப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்: இன்று மெஹந்தி விழாவும், நாளை ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தை முடித்துவிட்டு ஒரு மாதம் அவர்கள் ஹனிமூனுக்கு பிளான் செய்திருக்கிறார்களாம். அதுவரை சினிமா, சோஷியல் மீடியா என அத்தனையிலிருந்தும் விலகியிருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ராஷ்மிகா வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நாங்கள் எந்த திட்டத்தையும் போடுவதற்கு முன்பே; எதையும் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே எங்களுடன் இருந்தீர்கள். அளவற்ற அன்புடன் எங்களுக்கு நீங்கள் ஒரு பெயரையும் கொடுத்தீர்கள். எங்களை VIROSH என்றும் அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக; நாங்கள் இணைவதை ஒரு பெயரில் அழைக்க விரும்புகிறோம்.
VIROSH திருமணம்: அது 'VIROSH திருமணம்'. எங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் எங்களின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள்" என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











