ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. இரண்டு பேரின் அம்மாவும் டான்ஸ் பின்னிட்டாங்களே.. களைகட்டிய இரவு
உதய்பூர்: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இன்னும் சில மணி நேரத்தில் உதய்பூரில் திருமணம் நடக்கவிருக்கிறது.கடந்த 24ஆம் தேதியிலிருந்தே அவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முதலில் ஹல்தி கொண்டாட்டம் நடந்தது. அதனையடுத்து நேற்றிரவு சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. அதில் இரண்டு பேரின் தாய்களும் நடனம் ஆடிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி பயங்கர ட்ரெண்டாகியுள்ளது.
ரக்ஷித் ஷெட்டியுடனான பிரேக்கப்பிற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்தார் ராஷ்மிகா மந்தனா. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பே அவர்களுக்கான சம்மதம் கிடைத்துவிட்டாலும்; தங்களது கரியரில் கவனம் செலுத்தியதால் திருமணம் பற்றி யோசிக்காமல் இருந்தார்கள். பிறகு கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். ஒருவழியாக அவர்கள் திருமண பந்தத்துக்குள் நுழைவதற்கான முதல் அடியை எடுத்து வைத்ததால் ரசிகர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
திருமண ஏற்பாடுகள்: நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமண ஏற்பாடுகளையும் குடும்பத்தினர் செய்ய தொடங்கிவிட்டார்கள். பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் என உறுதி செய்யப்பட்டது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில நாட்களுக்கு முன்புதான் ராஷ்மிகாவும், தேவரகொண்டாவும் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்திருந்தார்கள். தொடர்ந்து இரண்டு பேரின் குடும்பத்தினரும் சில நாட்களுக்கு முன்பு உற்சாகத்தோடு உதய்பூருக்கு சென்று சேர்ந்தார்கள்.

தொடங்கிய கொண்டாட்டம்: உதய்பூருக்கு சென்ற கையோடு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. 23ஆம் தேதி மாலை கேண்டில் லைட் டின்னரில் ஜப்பானிய வகை உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் நீச்சல் குளத்திலேயே வைத்து பார்ட்டியெல்லாம் கொடுத்து அசத்தினார்கள். தொடர்ந்து குடும்பத்தினரிடையே VIROSH என்ற பெயரில் கிரிக்கெட் போட்டியையும் ஜாலியாக நடத்தினார்கள். தங்கள் திருமணத்துக்கு அவர்கள் VIROSH திருமணம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி பிளான்: அந்த பார்ட்டி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியெல்லாம் நடந்த பிறகு 24ஆம் தேதி ஹல்தி கொண்டாட்டமும், மெஹந்தி கொண்டாட்டமும் நடந்தது. அப்போது ராஷ்மிகா கையில் ரொம்பவே அழகான மெஹந்தி போடப்பட்டது. அதற்கு பிறகு நேற்று இரவு ஐடிசி மெமண்டோஸில் இரண்டு பேரின் சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. அதில் விஜய் தேவரகொண்டா கருப்பு கோட்டும், ராஷ்மிகா மந்தனா லைட் சந்தன நிறத்தில் கவுனும் அணிந்திருந்தார்கள். இரண்டு பேரும் கைகளை பிடித்து நடந்து வந்தது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
களைகட்டிய நடனம்: இந்நிலையில் சங்கீத் நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்று லீக்காகியிருக்கிறது. அதாவது இரண்டு பேரின் அம்மாக்களும் நேற்றைய நிகழ்ச்சியில் சூப்பராக நடனம் ஆடினார்கள். அவர்களுடன் சேர்ந்து உறவினர்களும் நடனம் ஆடினார்கள். முன்னதாக, இந்தத் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என மணமக்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் பிரபலங்கள்: முன்னதாக, இந்தத் திருமணத்தில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உதய்பூர் சென்றார். அவர் இந்தத் திருமணத்துக்காகத்தான் வந்திருக்கிறாரா என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதேசமயம் நிச்சயம் அவர் திருமணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுன், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்டோரும் இதில் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications