Rashmika : தன்பாலின ஈர்ப்பாளராக ராஷ்மிகா மந்தனா?.. பத்தீட்டு எரியும் பாலிவுட்.. திருமணம் முடிந்ததும் ஆரம்பம்
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்றைக்கு இந்திய அளவில் ஜொலிக்கும் பான் இந்தியா ஸ்டாராக உள்ளார். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவராக உள்ளார். இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வசூலிப்பதால் ராசியான நடிகை என்றும் பெயர் வாங்கி உள்ளார். இப்படி இருக்கையில் இவருக்கு வரும் 26ஆம் தேதி நடிகரும் அவரது பல ஆண்டு கால காதலருமான விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா எடுத்துள்ள தைரியமான முடிவு குறித்த தகவல் தற்போது மொத்த பாலிவுட் தொடங்கி தற்போது மொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்துள்ளது.
அதாவது காக்டைல் 2 என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க கமிட் ஆகிவிட்டார். இந்த படத்தில் கதாநாயகனாக ஷாகித் கபூர் நடிக்கிறார். அதேபோல் மற்றொரு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சனோன் நடிக்கிறாரார் என்று கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இருவரும் அதாவது ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் என இருவரும் படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார்களாம். இந்த தகவல் தற்போது மொத்த பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது.

லெஸ்பியன்: இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லெஸ்பியனாக நடிக்க முடிவெடுத்துள்ளது மிகவும் தைரியமான முடிவு என்றும், இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இந்த தகவலை படக்குழு தரப்பில் இருந்து யாரும் தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் கதை குறித்து தெரிந்தவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
படப்பிடிப்பு: இது மட்டும் இல்லாமல் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ராஷ்மிகா மந்தனா தன்பாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார் என்ற தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமணம்: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. அதேபோல் மார்ச் மாதம் 4ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











