ரசிகர்களை கேள்வி கேளுங்க என தூண்டிவிட்ட ராஷ்மிகா.. ட்விட்டரில் டிரெண்டாகும் #RashmikaReplies!

Recommended Video

Rashmika Slams Netizens : அவ்ளோதான் உனக்கு.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா

ஹைதராபாத்: கீத கோவிந்தம் படத்தின் மூலம் இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கப் போகிறேன். உங்களது கேள்விகளை கேளுங்கள் என ட்வீட் போட்டுள்ளார்.

2016ல் கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ஆனல, விஜய்தேவரகொண்டா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான கீத கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம்' பாடல் மூலம் இந்தியளவில் பிரபலமானார்.

ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகாவிடம் கேளுங்க

சமீபத்தில் திரைத் துறைக்கு ராஷ்மிகா வந்து 3 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், அப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த ராஷ்மிகா, அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தற்போது என்னிடம் என்ன கேட்க நினைக்கிறீர்களோ கேளுங்கள் என ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்து வருகிறார்.

டிரெண்டிங்

ராஷ்மிகா மந்தனா இப்படியொரு ட்வீட் போட்டவுடன் அவரது ரசிகர்கள் லைனில் க்யூ கட்டி வந்து நின்று கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். மேலும், #RashmikaReplies என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதியுடன் எப்போ நடிப்பீங்க

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா தான் நடிப்பார் என்ற பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் அடிபட்டு வந்தன. ஆனால், தனக்கு அந்த படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என ராஷ்மிகா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என ராஷ்மிகாவிடம் விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஹாட் பேபி

டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ஹாட் பேபி என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஜாலியான சம்பவம்

மகேஷ் பாபு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஜாலியான சம்பவம் பற்றி சொல்லுங்க என மகேஷ் பாபு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தல அஜித் பற்றி ஒரு வார்த்தை

டோலிவுட்டில் மட்டுமின்றி சென்னையிலும் ராஷ்மிகாவின் ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. அஜித் ரசிகர்கள், தல அஜித்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க எனக் கேட்டு வருகின்றனர்.

சோ க்யூட்

ராஷ்மிகா மந்தனா குறும்புத்தனத்திற்கு பெயர் போனவர். ரொம்ப க்யூட்டாகவும், கூலாகவும் அவர் பதிவிடும் சமூக வலைதள பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் சுலபமாக வைரலாகி விடும்.

அக்‌ஷய் குமார் பற்றி ஒரு வார்த்தை

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க என அக்‌ஷய் குமார் ரசிகர்களும் ராஷ்மிகாவிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

2019ல் உங்களுக்கு பிடித்த படம்?

கடந்த 2019ம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த படம் என்னவென்று சொல்லுங்க? எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. அதே போல உங்களுக்கு பிடித்த உணவு எதுவென்று சொல்லுங்க என இந்த ரசிகர் கேட்டுள்ளார்.

எனக்கு ஒரு ஐஸ்க்ரீம்

ரோஷி எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் என ஒழுக ஒழுக ஐஸ்க்ரீம் சாப்பிடும் ராஷ்மிகாவின் புகைப்படத்தை போட்டு இந்த ரசிகர் ஐஸ் கேட்கிறார்.

எப்போமா ரிப்ளை பண்ணுவ?

ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்னும் எந்த கேள்விக்கும் அவர் விடையளிக்கவில்லை. இதனால், கடுப்பான இந்த நெட்டிசன் எப்போமா ரிப்ளை பண்ணுவ? என்றும் கேட்டுள்ளார். விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ராஷ்மிகா பதிலளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X