sachein: ஷாலினி தோழியா நடிச்சது நான்தான்.. எல்லோரும் என்னை தேடுறீங்க.. திடீரென வெளியான வீடியோ

சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ச்சசின் திரைப்படம் தற்போது மீண்டும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், புது படத்தை போலவே சச்சின் படத்திற்கு டிரைலர் மற்றும் சிங்கிள்ஸ் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இப்படம் எதிர்பார்ப்புகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய்யின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெற்றியடைந்த முன்னணி ஹீரோக்களின் படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் புதிதாக வெளியான படங்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்தது. தமிழை தாண்டி மலையாளத்திலும் கோடிக்கணக்கில் வசூலை ஈட்டியது. அதேபோன்று கடந்த 18ஆம் தேதி விஜய், ஜெனிலியா, வடிவேலு நடித்த சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் புதிய படத்தை போன்றே ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தம் பறக்கின்றன.

Rashmi s video of playing Genelia s friend in the film Sachin goes viral

ஜெனிலியா ட்வீட்: விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கிறது. காதல், காமெடி என அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஜெனிலியா, சச்சின் ரீ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் குறித்த செய்திகள் வெளியானபோது இருந்த அதே மகிழ்ச்சிதான் இப்போதும் எனக்கு இருக்கு. சச்சின் திரைப்படம் என் கரியரில் மிகவும் ஸ்பெஷலான படம் எனவும் ஜெனிலியா தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஷாலினி தோழி யார்? : 20 வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்றாலும் ரசிகர்கள் கல்லூரி காலத்திற்கு சென்று வந்தது போல இருப்பதாக படம் பார்த்துவிட்டு கூறி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்ற வாடி வாடி பாடலுக்கு ஆட்டம் போட்டு கலக்குகிறார்கள். கில்லி படத்தை போன்றே சச்சின் படமும் இதுவரை 4 கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடித்தவர் திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவை விஜய்யின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Rashmi s video of playing Genelia s friend in the film Sachin goes viral

ராஷ்மி வெளியிட்ட வீடியோ: மேலும் அந்த பெண் யார் என சமூகவலைதளத்தில் தேட தொடங்கிய ரசிகர்கள் அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து வைரலாக்கினர். மேலும் , அந்த பெண் யார் என்பதையும் கண்டுபிடித்து அவரை பின்தொடர தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென வைரலானதை தொடர்ந்து அந்த நடிகை தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஹாய் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ராஷ்மி. இத்தனை வருடங்கள் கழித்து சச்சின் படத்தை கொண்டாடுவதோடு என்னையும் தேடி கண்டுபிடித்து வைரலாக்கி வருவது பெருமையாக இருக்கிறது. ஸ்மிருதி என்ற சின்ன கதாபாத்திரத்தில் நடித்த என்னைத் தேடி வந்து அன்பை பொழியிறீங்க. நான் கல்லூரியில் படிக்கும் போது சச்சின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ஏற்று சின்ன ரோலில் நடித்த என்னை இந்த அளவிற்கு கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சச்சின் படத்தில் ஷாலினி காதல் சேர முக்கியமாக தோழியின் வசனங்கள் இருக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு 20 வயது. இப்போது திருமணம் முடிந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டேன் என ராஷ்மி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X