»   »  எகிறிய சங்கீதா ரேட்

எகிறிய சங்கீதா ரேட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிரைக் கொடுத்து பல படங்களில் நடித்தும் கூட கிடைக்காத ஸ்டார் வேல்யூ, உயிர்என்ற ஒரே படத்தின் மூலம் கிடைத்துள்ளது சங்கீதாவுக்கு.

கொழுக் மொழுக் குதிரை போல தமிழ் சினிமாவுக்கு சங்கீதா (அப்போஅண்ணியின் பெயர் ரசிகா) அறிமுகமானபோது, கிளாமர் டால் போலவேஅத்தனை படங்களிலும் வந்து போனார். பாண்டியராஜன், பிரபு தேவா எனஇரண்டாம் மட்ட ஹீரோக்களுடன்மட்டுமே ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும் கிடைத்ததை வைத்து குதிரையோட்டி வந்தார் சங்கீதா. அப்படியேஅவ்வப்போது தெலுங்குக்கும் விசிட் அடித்து காலத்தை தள்ளி வந்தார். திடுதிப்பெனஒரு நாள் மார்க்கெட் போண்டி ஆனது. தேவுடா என்று நிலையை எண்ணி வீட்டோடுடங்கிக் கிடந்தார்.

சும்மா கிடந்தவரை கூப்பிடடுகஞ்சா அழகியாக்கி பிதாமகனில் விக்ரமுக்கு ஜோடிசேர்த்தார் பாலா. அந்தப் படத்தில்ச சங்கீதாவின் நடிப்பு பேசப்பட்டாலும் கூட புதியபட வாய்ப்பு ஏதும் வரவில்லை.

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை கதையாக விசும்பிக் கொண்டிருந்தவருக்குபுத்துணர்ச்சி அளித்துள்ளது உயிர் படத்தின் வெற்றி. கொழுந்தனை கொய்யக்காத்திருக்கும் அண்ணி வேடததில் சங்கீதா செய்துள்ள அட்டகாச நடிப்பால் பல புதுப்படங்கள் சங்கீதாவைத் தேடி ஓடி வந்து கொண்டுள்ளன.

இதனால் குதூலகமாகியுள்ள சங்கீதா நல்ல கேரக்டர்களாகப் பார்த்து செலக்ட் செய்யஆரம்பித்துள்ளாராம். ஆனால் கண்டிப்பாக உயிர் அருந்ததி போல இன்னொருபடத்தில் நடிக்க மாட்டாராம். அதேசமயம, வித்தியாசமான வில்லியாக நடிக்கஅம்மணி ரெடியாம்.

ஆரம்பத்தில் கொடுப்பதை கொடுங்கள் என்றுசம்பளம் வாங்கிக்கொண்டிருந்தசங்கீதா இப்போது என்னோட ரேட் 20 லட்சம் என்று கூறி தயாரிப்பாளர்களின்தாவாக்கட்டையை குத்திப் பார்க்கிறாராம்.

ஆத்தாடி ஆத்தா, இம்புட்டு ஏத்திப்புட்டீகளே என்று கேட்கிறவர்களிடம், அதுக்கேத்தநடிப்பையும் கிளாமரையும் எவ்வளவு வேணுமோ தாராளமா எடுத்துக்குங்க என்றுசமாளிக்கிறாராம்.

அது சரி காத்து எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் தானே தூத்த முடியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil