»   »  காசு, காதல்.. ரசிகா

காசு, காதல்.. ரசிகா

Subscribe to Oneindia Tamil

உயிர் படம் கொடுத்த வாழ்க்கையால் ரசிகா என்ற சங்கீதா பிசியாகி விட்டார். அவர்அடுத்து நடித்துள்ள காசு படம்தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்ஆகியிருக்கிறது.

என்னதான் எண்ணையைத் தடவிக் கொண்டு மண்ணில் உருண்டு புரண்டாலும்ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்பார்கள்.

அதுபோலத்தான் ரசிகா என்ற பெயரில் சங்கீதா ஏகப்பட்ட படங்களில் நடித்துப்பார்த்தார். ஆனால் ஒன்னுமே சங்கீதாவை கரை ஏற்றவில்லை.

இடையில் பிதாமகனில் கஞ்சா கன்னியாக வந்து நடிப்பில் ரசிகர்களின்பாராட்டுக்களை அள்ளினார். என்ன பிரயோஜனம், புதுசா படம் ஏதும் வரவில்லையே.


அப்செட் ஆகிக் கிடந்த சங்கீதாவைக் கூப்பிட்டு உயிர் படத்தின் கதையைச் சொன்னார்இயக்குனர் சாமி.

இம்ப்ரஸ் ஆன சங்கீதா இப்படத்தில் கொளுந்தனுக்கு கொக்கி போடும் கெட்டஅண்ணியாக நடித்து, சர்ச்சைகளையும், சபாஷ்களையும் ஒரு சேர அள்ளினார். உயிர்படம்தான் உண்மையில் சங்கீதாவுக்கு திரையுலகில் மறுவாழ்வு கொடுத்துள்ளது.


இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் சங்கீதாவைத் தேடி வந்தன.ஆனாலும் அத்தனையுமே உயிர் அருந்ததியைப் போன்ற ஏடாகூடமானவேடங்கள்தான்.

அய்யோடா, வேண்டாமப்பா பஞ்சாயத்து என்று பயந்து போன சங்கீதா, காசு என்றபடத்தை மட்டும் ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இப்படம் சங்கீதாவின் நடிப்பின் முழுப் பரிமாணத்தையும் வெளிக் கொண்டுவந்துள்ளதாம். இதை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் இயக்குனர் கவுரிமனோகர்.


காசுன்னு படத்துக்கு பெயர் வச்சிருக்கீங்களே, இன்னாத்துக்கு என்று மனோகரிடம்கேட்டபோது,

காசு, காதலை விலை பேசுது. கடைசியில் காசு ஜெயிக்குதா, காதல் ஜெயிக்குதாஎன்பதுதான் படத்தோட கதை என்று விவரித்தார்.

இது ஹீரோயினுக்கான கதை. எனவே சங்கீதா நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்.உயிர் படத்தை விட இப்படம் படு அருமையாக வந்திருக்கிறது. அவரோட நடிப்புபெரும் பாராட்டை அள்ளிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


இப்படத்தில் ரஹ்மான் வில்லனாக நடித்திருக்கிறார். அவரோட நடிப்பும் அருமையாகவந்திருக்கிறது. ஆனாலும் சங்கீதாவின் ரோல்தான் நச்சென்று வந்திருக்கிறதுஎன்கிறார்.

காசு போட்ட தயாரிப்பாளருக்கு முதல் திரும்பி வந்தா சரி...

Read more about: rasikas next film kaasu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil