»   »  சங்கீதா-மேடி ஜோடி

சங்கீதா-மேடி ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் படத்தின் வெற்றியால் சங்கீதாவின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. புதிதாக மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்சங்கீதா.

ரசிகா என்ற பெயர் ராசியில்லை என்று சங்கீதா என மாற்றியது முதலே சங்கீதாவுக்குஅதிர்ஷ்டம் பொத்துக் கொண்டு கொட்டுகிறது. உயிர் பட அருந்ததி கேரக்டர்அவருக்கு ஏராளமான பாராட்டுக்களையும், வசவுகளையும் பெற்றுக் கொடுத்தது.இப்போது படங்களும் குவிய ஆரம்பித்துள்ளன.

தனம் என்ற படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறாராம் சங்கீதா. இதைத் தொடர்ந்துஇப்போது மாதவனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு சங்கீதாவைத் தேடி வந்துள்ளது.படத்திற்குப் பெயர் இவன் யாரோ?

பர்மாவாலா என்ற மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தைத்தயாரிக்கப் போகிறது. நிதிஷ்காந்த் காமத் என்கிற மராத்தி இயக்குநர் இப்படத்தைஇயக்கப் போகிறார். 23ம் தேதி ஷூட்டிங்குக்குப் போகிறார்களாம்.

உயிர் கொடுத்த பிரேக்கால் அதிர்ஷடக் காற்று தன் பக்கம் வீசுவதால் லேசாகசம்பளத்தையும் உயர்த்தியுள்ளாராம் சங்கீதா. சம்பளத்தை ஏத்திட்டீங்களே,பிதாமகனில் கூட இவ்வளவு கேக்கலியே என்று யாராவது கேட்டால், அது அப்போ,இது இப்போ என்று வடிவேலு பாணியில் நக்கலாக கூறுகிறாராம் சங்கீதா.

தனம் படம் தவிர காசு என்ற படத்திலும் நடிக்கிறார் சங்கீதா. காசுக்காக எதையும்செய்யும் வில்லங்கமான ரோலில் நடிக்கிறார் சங்கீதா. மாதவனுடன் நடிக்க வந்துள்ளவாய்ப்பை ரொம்ப ஆவலாக எதிர்பார்க்கிறாராம் சங்கீதா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடி போட்டு நடிப்பதால் சங்கீதாவுக்கேஇப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

அப்படிப் போட்டுத் தாக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil