அத்தை ரசிகா... பிதாமகனுக்கு பின் தமிழில் காணாமல் போன சங்கீதா என்ற ரசிகா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் உயிர்படத்தின் மூலமாக.. இதில் ஹீரோ ஸ்ரீகாந்துக்கு அத்தை வேடத்தில் ரசிகா பின்னி எடுத்து வருகிறாராம்.இப்போது தெலுங்கில் அம்மணி படு பிசியாம். அத்தோடு ஒரு கலை நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் பறந்துபறந்து போய் சேவையாற்றிவிடுகிறார். இது எந்த நாட்டில் நடந்தாலும் சரி, தெலுங்குப் பட உலகம் நடத்தும் கலைநிகழ்ச்சியாக இருந்தால் அந்த லிஸ்டில் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறார் ரசிகா.இப்போது கையில் 4 தெலுங்குப் படங்கள், எல்லாமே செகண்ட், தர்ட் ஹீரோயின் தான். ஒரு மலையாளப் படம்,ஒரு கன்னடப் படம் (இங்கு மட்டும் மெயின் ஹீரோயின்) என்று பிஸியாக இருக்கும் ரசிகாவுக்கு உயிர் மூலம்மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.பிதாமகனுக்காக தமிழக அரசின் விருது வாங்கிய கையோடு உயிர் படத்தில் அத்தை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.சின்ன வயதில் இப்படி அத்தை வேடத்தில் நடிப்பதில் தனக்கு கவலை ஏதும் இல்லை என்கிறார்.. (துட்டு வந்தாசரி)இந்தப் படத்தில் ரசிகாவுக்குக் கணவராக நடிப்பது ஆசிம் சர்மா என்ற மும்பைக்காரர். இவர் கனவு மெய்ப்படவேண்டும் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு மகனாக நடித்திருந்தார்.ரம்யா மகன் இப்போது ரசிகாவுக்கு கணவர் வேடத்தில்....!உயிர் படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் இளைஞனான ஸ்ரீகாந்த் அழகில் மயங்கி அவனதுஅண்ணியான ரசிகா அவரைக் காதலிக்கிறாராம். அதற்குத் தடையாக இருக்கும் கணவரையே கொல்கிறாராம்.ரொம்ப வில்லங்கமான கதை போலிருக்கு.இந் நிலையில் உண்மையிலேயே காதலிலும் சிக்கிக் கொண்டுள்ளார் ரசிகா. பொது நிகழ்ச்சிகளுக்கு அந்தஹாண்ட்சம் வாலிபரோடு தான் வந்து போகிறார். அவருக்கு வயசு நிச்சயம் ரசிகாவை விட குறைவு தான்என்கிறார்கள்.முதலில் டைவர்சான ஒரு இளம் தயாரிப்பாளருடன் ரசிகா கிசுகிசுக்கப்பட்டது நினைவில் இருக்கிறதோ...

By Staff

பிதாமகனுக்கு பின் தமிழில் காணாமல் போன சங்கீதா என்ற ரசிகா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் உயிர்படத்தின் மூலமாக.. இதில் ஹீரோ ஸ்ரீகாந்துக்கு அத்தை வேடத்தில் ரசிகா பின்னி எடுத்து வருகிறாராம்.


இப்போது தெலுங்கில் அம்மணி படு பிசியாம். அத்தோடு ஒரு கலை நிகழ்ச்சியையும் விட்டுவிடாமல் பறந்துபறந்து போய் சேவையாற்றிவிடுகிறார். இது எந்த நாட்டில் நடந்தாலும் சரி, தெலுங்குப் பட உலகம் நடத்தும் கலைநிகழ்ச்சியாக இருந்தால் அந்த லிஸ்டில் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறார் ரசிகா.

இப்போது கையில் 4 தெலுங்குப் படங்கள், எல்லாமே செகண்ட், தர்ட் ஹீரோயின் தான். ஒரு மலையாளப் படம்,ஒரு கன்னடப் படம் (இங்கு மட்டும் மெயின் ஹீரோயின்) என்று பிஸியாக இருக்கும் ரசிகாவுக்கு உயிர் மூலம்மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிதாமகனுக்காக தமிழக அரசின் விருது வாங்கிய கையோடு உயிர் படத்தில் அத்தை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சின்ன வயதில் இப்படி அத்தை வேடத்தில் நடிப்பதில் தனக்கு கவலை ஏதும் இல்லை என்கிறார்.. (துட்டு வந்தாசரி)


இந்தப் படத்தில் ரசிகாவுக்குக் கணவராக நடிப்பது ஆசிம் சர்மா என்ற மும்பைக்காரர். இவர் கனவு மெய்ப்படவேண்டும் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு மகனாக நடித்திருந்தார்.

ரம்யா மகன் இப்போது ரசிகாவுக்கு கணவர் வேடத்தில்....!

உயிர் படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் இளைஞனான ஸ்ரீகாந்த் அழகில் மயங்கி அவனதுஅண்ணியான ரசிகா அவரைக் காதலிக்கிறாராம். அதற்குத் தடையாக இருக்கும் கணவரையே கொல்கிறாராம்.ரொம்ப வில்லங்கமான கதை போலிருக்கு.

இந் நிலையில் உண்மையிலேயே காதலிலும் சிக்கிக் கொண்டுள்ளார் ரசிகா. பொது நிகழ்ச்சிகளுக்கு அந்தஹாண்ட்சம் வாலிபரோடு தான் வந்து போகிறார். அவருக்கு வயசு நிச்சயம் ரசிகாவை விட குறைவு தான்என்கிறார்கள்.

முதலில் டைவர்சான ஒரு இளம் தயாரிப்பாளருடன் ரசிகா கிசுகிசுக்கப்பட்டது நினைவில் இருக்கிறதோ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X