»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரதிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை

அழகு, திறமை எல்லாம் இருந்தும் ரதிக்கு தமிழில் நிலையான ஒரு இடம் கிடைக்கவில்லை. சொல்ல மறந்தகதையில் ரதியை நன்றாக நடிக்க வைத்திருந்தார் நெறியாளுனர் (இப்படி சொல்லலைன்னா கோச்சுக்குவாரு)தங்கர்பச்சான்.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற நினைப்பில் இருந்த ரதிக்கு பெரிதாகவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. காரணம் கவர்ச்சி விஷயத்தில் இவர் காட்டிய சிக்கனம்தான். இதனாலேயே சிலபட வாய்ப்புகளை இழந்தார்.

சில்லான்குஞ்சுகள் சிலரோடு சேர்ந்து இவர் நடித்த பல்லவன் என்ற படம் பெரிதாக ஊத்திக் கொண்டது. பின்புதீபாவளிக்கும், பொங்கலுக்கும் சின்னத்திரைகளுக்குப் பேட்டி கொடுத்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் தான் அடிதடி பட வாய்ப்பு கிடைத்தது. தனுஷ், சிம்பு, விஜய் உள்ளிட்ட இளைய ஹீரோக்களோடுடூயட் பாட கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு சத்யராஜூடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணமேவேப்பங்காயாக இருந்தது.

வேறு வழியேதும் இல்லாததால் ஒப்புக் கொண்டு நடித்தார். அதிலும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்றுஇடையிடையே அலும்பு பண்ண, படத்தை விட்டுத் தூக்கும் முடிவுக்கு இயக்குனர் வந்தார். இதைக் கேட்டதும்அலறியடித்துக் கொண்டு சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்தார் ரதி.

அடிதடி படம் ஓரளவு ஓடியது. படம் ஓடியதில் சத்யராஜூக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் ரதிக்கு எந்தவாய்ப்புகளும் வரவில்லை. இனி தமிழை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் கதைக்கு உதவாது என்று புரிந்துகொண்டவராக தெலுங்கு மற்றும் கன்னட பக்கம் ஒதுங்கினார்.

அங்கு சில படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து, ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் இடையே பறந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழில் லுக் என்ற படத்தில் பரணிகுமார் என்ற அறிமுக கதாநாயகனுடன்ஜோடி சேர வாய்ப்பு வந்தது.

எங்கே தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் இருந்த ரதி இந்தப் படத்தை கப்பென்றுபிடித்துக் கொண்டார். இப்போது படத்தின் தலைப்பை லுக் என்று மாற்றியுள்ளார்கள்.

கதாநாயகியை மாத்தாம இருந்தா சரிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil