»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரதி வர வர ரொம்பவே உம்மனா மூஞ்சியாக மாறி வருகிறாராம்.

முதல் படத்தில் நடித்தபோது இருந்த உற்சாகமான ரதியை இப்போது பார்க்க முடியவில்லை என்கிறார்கள்பார்த்தவர்கள், பழகியவர்கள்.

கொஞ்சம் மூடி டைப்பான ரதி, படப்பிடிப்புத் தளங்களில் அதிகம் பேச மாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம்வசனங்களை கூட பேச மறந்து விட்டு அடிக்கடி சாரி சொல்கிறாராம். எப்போதும் மனதில் ஒரு குழப்பத்துடன் அவர்ஷூட்டிங்கில் கலந்து கொள்வதால், அடிக்கடி ரீடேக் எடுக்க வைக்கிறாராம்.

அவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் காதல் என்று ஒரு பேச்சு கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில்உலவி வருகிறது. சமீபத்தில் அவர் ஒரு விலை உயர்ந்த காரைக் கூட பரிசாகத் தந்தாராம்.

இதனால் வீட்டில் குழப்பம் என்கிறார்கள். காதல் தேவையா என்று ரதியில் அம்மா போர்க் கொடிதூக்கியிருப்பதாகப் பேச்சு.

விக்ரமுடன் இணையும் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தை முடித்துவிட்டு விக்ரமை வைத்து அடுத்த படத்தை எடுக்கவுள்ளார்.த்ரில்லர் கதை என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil