twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமக்கோழி ரதி சொல்ல மறந்த கதையில் அறிமுகமான ரதிக்கு ஒரு வழியாக இப்போது மீண்டும் கோலிவுட் கதவு திறந்துள்ளது.சொல்ல மறந்த கதைக்குப் பின், எங்கே எனது கவிதை படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். படம் பெரும் பிளாப்.இதைத் தொடர்ந்து அவர் நடித்த கும்மாளம், பல்லவன் ஆகிய படங்களும் வரிசையாக படுதோல்வி அடையவே ராசியில்லாத நடிகைஎன்று பட்டம் கட்டப்பட்டார். நீண்ட காத்திருப்புக்குப் பின் கடைசியாக அடிதடி என்ற படத்தில் நடித்தார். 6 பிளஸ் அடி, 85 பிளஸ் கிலோ எடையுள்ள சத்யராஜுக்கு ஜோடியாக அவரது உயரம், எடையில் 2ல் ஒரு பங்கு இருந்த ரதி ஜோடிபோட்டபோது அதைப் பார்த்து தியேட்டரே சிரித்தது. வயசு வித்தியாசம் பார்க்காமல் வரும் காதல் பற்றிய கதை என்றாலும் சைஸ்வித்தியாசம் தான் படு கிண்டலுக்குள்ளானது.அந்தப் படத்துக்குப் பின் ரதிக்கு தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழில் பிற நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும்தொழிலுக்கு மாறிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் பெண்ணான ரதிக்கு மிக நல்ல வாய்ஸ். இதனால் அந்தத் தொழில்கை கொடுத்தது.அப்படியே தெலுங்கு, கன்னடத்தில் 2ம் தர படங்களில் நடித்தபடியே தமிழில் வாய்ப்பு வேடடையும் நடத்தி வந்தார். அப்படியாக ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், படத்தில் படு கிளாமர் காட்டும் ரோலாம். முதலில் அதைத் தவிர்க்கப் பார்த்த ரதி, காலம் தன்னைவிட்டுப் போவதை உணர்ந்து, அந்த கவர்ச்சி ரோலை துணிந்து ஏற்றுக் கொண்டுவிட்டார். படத்தின் பெயர் சாமக்கோழி. நளினி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கும் இதன் சூட்டிங் மதுரை, பெங்களூர், கும்பகோணம்,மகாபலிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்த மாத்தே படம் திரைக்கு வந்துவிடுமாம்.மீனாட்சி சுந்தரம் என்பவர் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை உணர்ந்து ரதியும் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மீனவ சமூகத்தை பேக்கிரவுண்டாகவைத்து எடுக்கப்படும் கதையாம். ஹீரோ புதுமுகம். இசை தேவா.

    By Staff
    |

    சொல்ல மறந்த கதையில் அறிமுகமான ரதிக்கு ஒரு வழியாக இப்போது மீண்டும் கோலிவுட் கதவு திறந்துள்ளது.

    சொல்ல மறந்த கதைக்குப் பின், எங்கே எனது கவிதை படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். படம் பெரும் பிளாப்.

    இதைத் தொடர்ந்து அவர் நடித்த கும்மாளம், பல்லவன் ஆகிய படங்களும் வரிசையாக படுதோல்வி அடையவே ராசியில்லாத நடிகைஎன்று பட்டம் கட்டப்பட்டார். நீண்ட காத்திருப்புக்குப் பின் கடைசியாக அடிதடி என்ற படத்தில் நடித்தார்.


    6 பிளஸ் அடி, 85 பிளஸ் கிலோ எடையுள்ள சத்யராஜுக்கு ஜோடியாக அவரது உயரம், எடையில் 2ல் ஒரு பங்கு இருந்த ரதி ஜோடிபோட்டபோது அதைப் பார்த்து தியேட்டரே சிரித்தது. வயசு வித்தியாசம் பார்க்காமல் வரும் காதல் பற்றிய கதை என்றாலும் சைஸ்வித்தியாசம் தான் படு கிண்டலுக்குள்ளானது.

    அந்தப் படத்துக்குப் பின் ரதிக்கு தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழில் பிற நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும்தொழிலுக்கு மாறிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் பெண்ணான ரதிக்கு மிக நல்ல வாய்ஸ். இதனால் அந்தத் தொழில்கை கொடுத்தது.

    அப்படியே தெலுங்கு, கன்னடத்தில் 2ம் தர படங்களில் நடித்தபடியே தமிழில் வாய்ப்பு வேடடையும் நடத்தி வந்தார். அப்படியாக ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், படத்தில் படு கிளாமர் காட்டும் ரோலாம். முதலில் அதைத் தவிர்க்கப் பார்த்த ரதி, காலம் தன்னைவிட்டுப் போவதை உணர்ந்து, அந்த கவர்ச்சி ரோலை துணிந்து ஏற்றுக் கொண்டுவிட்டார்.


    படத்தின் பெயர் சாமக்கோழி. நளினி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கும் இதன் சூட்டிங் மதுரை, பெங்களூர், கும்பகோணம்,மகாபலிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்த மாத்தே படம் திரைக்கு வந்துவிடுமாம்.

    மீனாட்சி சுந்தரம் என்பவர் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

    ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை உணர்ந்து ரதியும் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மீனவ சமூகத்தை பேக்கிரவுண்டாகவைத்து எடுக்கப்படும் கதையாம். ஹீரோ புதுமுகம். இசை தேவா.

      Read more about: rathi is back in tamil films
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X