இதுவரை சர்ச்சையில் சிக்காததற்கு காரணம் இதுதான்.. அம்மு அபிராமி பளீச்!
சென்னை: ராட்சசன் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் அம்மு அபிராமி, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், நான் ஒரு நடிகை என்பதால், அனைவரும் என் நடிப்பை பற்றித்தான் பேச வேண்டும் என் சொந்த விஷயத்தை பொது இடத்தில் பேசுவதை விரும்பவில்லை என்றார்.
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான அம்மு அபிராமி, பைரவா படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். இதன்பிறகு, அம்மு அபிராமிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய விருது பெற்ற அசுரன் படத்தில் தனுஷின் முறைபெண்ணாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

இதைத்தொடர்ந்து, துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கண்ணகி திரைப்படம் வெளியானது. இதில் அம்மு அபிராமி 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியான கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவரிடம் நிறங்கள் மூன்று, ஜகதாம்பாள், கனவு மெய்ப்பட, குதூகலம்,கோலி சோடா 1.5 என அரை டசனுக்கும் மேல் திரைப்படங்கள் கைவசம் உளளன.
அதுவரைக்கும் சர்ச்சையில் சிக்கவில்லை: இந்நிலையில், நடிகை அம்மு அபிராமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை வேறு வேறு என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கேரக்டரை பற்றி என் நடிப்பை பற்றித்தான் பேச வேண்டும் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதனால், நான் சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் எதையும் எந்த பேட்டியிலும் நான் சொல்லியது இல்லை. இதுவரைக்கும் எந்த சர்ச்சையிலும் நான் சிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்றார்.
எப்போதும் ஜாலியாக இருப்பேன்: தொடர்ந்து பேசிய அம்மு, 10ம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை ஒன் சைடா லவ் பண்ணேன், அதை மறைக்கக்கூட தெரியாமல் வீட்டில் பங்கமா மாட்டி அடி வாங்கினேன். என் வாழ்க்கையில இந்த விஷயத்தை என்னால மறக்கவே மாட்டேன் என்றார்.மேலும், நான் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன், இதனால், எப்போதும் எதாவது செய்து கொண்டே இருப்பேன். எனக்கு ஆட்டோவில் போவது ரொம்ப பிடிக்கும், அப்படி போகும் போது மாஸ் போட்டுக்கொள்வேன். அப்படி மாஸ் போடவில்லை என்றாலும், யாரும் பெருசா கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏதாவது நம்மிடம் வித்தியாசமாக இருந்தால் மட்டும் தான் மக்கள் நம்மை கூர்ந்து கவனிப்பார்கள் என்று அம்மு அபிராமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











