»   »  சொத்தை விற்ற ரவளி!

சொத்தை விற்ற ரவளி!

Subscribe to Oneindia Tamil

சீமைப் பசு என்று புதுமைப் பித்தன் பார்த்திபனால் அன்போடு வர்ணிக்கப்பட்ட ரவளி, சென்னையில் இருந்தமிச்ச சொச்ச சொத்துக்களையும் விற்றுவிட்டு முழுமையான ஆந்திரவாசியாகி விட்டார்.

விஜயகாந்த்துடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரவளி. வந்த புதிதில் ரவளியின்,ரகளையான கட்டழகு பிளஸ் கெட்டபைப் பார்த்து அப்போதைய ஹீரோயின்கள் எல்லாம் சற்றே மிரண்டார்கள்.காரணம், ரவளியாரின் பிரமாண்டம்.

எதிர்பார்த்தது போலவே சத்யராஜ், பார்த்திபன் என அப்போது முன்னணியில் இருந்த ஹீரோக்களுடன் கெட்டஆட்டம் போட்டார் ரவளி. கைப்புள்ள வினீத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது, ரவளி முற்றிலும்கிளாமர் சிங்காரியாக மாறி ரசிகர்களை உசுப்பேத்தினார்.

சீமைப் பசு என்ற பதத்திற்கு ஏற்படு படு மதர்ப்பாக கவர்ச்சி காட்டி, காளையர்களை கலங்கடித்து வந்தார் ரவளி.அவரது ரகளை இப்படியாக கொஞ்ச நாள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், மும்பையிலிருந்தும்,கேரளாவிலிருந்தும் முந்திரி, திராட்சை, ஆரஞ்சு என ஏகப்பட்ட பழக் குவியல்கள் வந்து கோலிவுட்டில்குவிந்ததால், பசுவுக்கு கிராக்கி குறைந்தது.

இதனால் தமிழில் ஓரங்கட்டப்பட்ட ரவளி, கொஞ்ச காலம் தெலுங்கில் தலையைக் காட்டி வந்தார். ஆனால்அங்கும் சீக்கிரமே ஏறக்கட்டப்பட்டு விட்டார். தமிழும், தெலுங்கும் தன்னைக் கைகழுவியதால் வீட்டோடுமுடங்கிய ரவளி இப்போது தனது சொந்த ஊரான ஹைதராபாத்திலேயே முழுமையாக செட்டிலாகி விட்டார்.

சென்னையில் இருந்த சில சொத்துக்களை முதலில் விற்ற ரவளி இப்போது மிச்ச சொச்சம் உள்ளசொத்துக்களையும் விற்று விட்டு ஹைதராபாத்திலேயே பக்காவாக செட்டிலாகி விட்டாராம்.

பெரிய புள்ளி ஒருவரின் ஆதரவுக் கரங்களுக்குள் படு பத்திரமாக இருக்கிறார் ரவளி என்கிறது டோலிவுட்தகவல் ஒன்று.

எங்கிருந்தாலும் நல்லா வாழ்க!

Read more about: ravali settles in andra

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil