»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கைவசம் படங்களே இல்லாத காரணத்தால் பயங்கரக் கடுப்புடன் உள்ளார் நடிகை ரவளி.

"சீமைப் பசு" என்று பார்த்திபனால் முன்மொழியப்பட்டு, சத்யராஜால் வழிமொழியப்பட்ட ரவளிக்கு நீண்ட நாட்களாகப் படங்களே இல்லை.

இதனால், போனால் போகிறதென்று டிவி சீரியலுக்குத் தாவினார் ரவளி. சன் டிவியில் ஒளிபரப்பான "முகங்கள்" சரியாகப் போகவில்லை என்பதால் ஊத்திமூடி விட்டார்கள்.

இதையடுத்து இருந்த டிவி சீரியலும் பறிபோய் விட்டதால் உற்சாக பானத்தின் துணையோடு வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார் ரவளி.

அவரது கையில் இப்போது இருப்பது "படைவீட்டு அம்மன்" மற்றும் "அன்புத் தொல்லை" என இரு படங்கள் மட்டும் தான். இந்தப் படங்கள் கூட முடியும்நிலையில் உள்ளன. அன்புத் தொல்லையில் பாண்டியராஜனுடன் நடித்து வருகிறார்.

ஆனால் வேறு புதுப் படங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தான் பாட்டிலும் கையுமாக வீட்டுக்குள்ளேயே ரவளி முடங்கியுள்ளார்.

யப்பா... யாராவது புதுப்பட சான்ஸ் கொடுங்கப்பா!!!

Please Wait while comments are loading...