Raveena Tandon Daughter: இன்னொரு வாரிசு நடிகையா? ரவீணா டாண்டன் மகளும் நடிக்க வராரு!

மும்பை: ஆளவந்தான், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனின் மகள் ரஷா ததானி இந்த ஆண்டு பாலிவுட்டில் இளம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

பாலிவுட்டில் ஏற்கனவே ஒரு பக்கம் நெபோடிசம் சர்ச்சை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரபலங்கள் தொடர்ந்து தங்கள் வாரிசுகளை நடிகர்களாக ஆக்கி வருகின்றனர்.

Raveena Tandon Daughter Rasha Thadani soon makes her bollywood debut

பிரபல பாலிவுட் நடிகையான ரவீணா டாண்டனி மூத்த மகள் 18 வயதே ஆன ராஷா ததானி இந்த ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதும் ஒரு பெரிய இடத்து பிள்ளை தான் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. நடிகர் அஜய் தேவ்கனின் உறவுக்காரரான அமன் தேவ்கன் உடன் இணைந்து ரஷா ததானி நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

Raveena Tandon Daughter Rasha Thadani soon makes her bollywood debut

பத்மஸ்ரீ விருது:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்மஸ்ரீ விருதை நேற்று பெற்றுக் கொண்ட ரவீணா டாண்டன் தனது மூத்த மகளுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு அனில் ததானி என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவீணா டாண்டனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ரஷா ததானி, பூஜா டாண்டன், சய்யா டாண்டன் மற்றும் ரன்பீர் ததானி என தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டி உள்ளார். இதில், 18 வயதை கடந்த மூத்த மகளை தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த தீவிர முயற்சியில் ரவீணா டாண்டன் ஈடுபட்டு வருகிறார்.

Raveena Tandon Daughter Rasha Thadani soon makes her bollywood debut

இன்ஸ்டாவில் கலக்கும் ரஷா ததானி:

ரஷா ததானியும் தன் பங்கிற்கு இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோக்களை போட்டு பாலிவுட் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார். சமீப காலமாக ரஷா ததானி தான் பாலிவுட் ரசிகர்களின் இமிடியேட் கனவுக் கன்னியாக மாறி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

அம்மாவை போலவே அழகு சிலையாக இருக்கும் ரஷா சினிமாவில் எந்தளவுக்கு அசத்தப் போகிறார் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் ஆக நடித்து மிரட்டிய ரவீணா டாண்டன் கேஜிஎஃப் 3ம் பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raveena Tandon Daughter Rasha Thadani soon makes her bollywood debut

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X