25 சவரன் திருட்டு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்ததை போலவே.. ஆளவந்தான் நடிகை வீட்டிலும் கைவரிசை
மும்பை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலும் பணிப்பெண் இப்படித்தான் பல சவரன் நகைகளை நைசாக திருடி ஆட்டையைப் போட்டு மாட்டிக் கொண்டார். தற்போது அதே போல, ஆளவந்தான், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரவீனா டாண்டனின் சகோதரர் ராஜீவ் டாண்டனின் இல்லத்தில் இருந்து சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கில், 47 வயதான ராஷி சாப்ரியாவை ஜூஹு போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இவர் ரவீனாவின் தாயார் வீனா டாண்டனைப் பராமரித்து வந்தவர்.
PTI தகவலின்படி, சாப்ரியா ராஜீவ் டாண்டன் குடும்பத்தினரின் நம்பிக்கை பெற்று, பின்னர் இந்தத் திருட்டை அரங்கேற்றினார். கர் பகுதியைச் சேர்ந்த இவர், 2020-ஆம் ஆண்டு முதல் பொதுவான தொடர்புகள் மூலம் குடும்பத்தினருக்கு அறிமுகமானவர். கணவர், பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் நெருக்கமான சாப்ரியாவுக்கு வீட்டிற்குள் தடையற்ற அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது. குடும்பத்தினர் வீட்டில் உள்ள லாக்கரை ஆய்வு செய்தபோது, அது உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். தங்கம், வைர நகைகள், இரண்டு காஸ்ட்லி கைக்கடிகாரங்கள் உட்பட பல விலைமதிப்பற்ற பொருட்கள் காணாமல் போயிருந்தன.
காணாமல் போன பொருட்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், ராஜீவ் டாண்டன் சாப்ரியாவை நேருக்கு நேர் கேள்வி கேட்டார். முதலில் மறுத்தாலும், பின்னர் திருட்டை ஒப்புக்கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. காணாமல் போன இரண்டு காஸ்ட்லி கைக்கடிகாரங்களை அவர் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால், பிற நகைகள் ஜகதீஷ் என்ற கூட்டாளியிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சாப்ரியா தெரிவித்தார். அவற்றை மீட்டுக் கொடுப்பதாக உறுதி அளித்தும், பலமுறை கோரிக்கை விடுத்தும் நகைகள் மீட்கப்படவில்லை என்று போலீஸார் கூறினர். இந்த பொருட்கள் வீட்டிலுள்ள இரண்டாவது தளத்தில்தான் வைக்கப்பட்டிருந்தன, இது குடும்பத்தினர் மற்றும் சாப்ரியாவுக்கு மட்டுமே அணுகக்கூடியவை.
ராஜீவ் டாண்டன் தனது புகாரில், சாப்ரியா ஒரு போலீஸ் தகவல் தெரிவிப்பவர் என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டாளி மூலம் தன்னை மிரட்ட முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். காணாமல் போன நகைகளைக் கேட்டு தன்னைத் தொந்தரவு செய்தால், பொய்யான போதைப்பொருள் வழக்கில் சிக்கவைப்பதாக அந்தக் கூட்டாளி மிரட்டியதாக ராஜீவ் தெரிவித்துள்ளார்.
சாப்ரியா மே 21 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 29 வரை போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடப்பதாக ஜூஹு காவல்துறையினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications