Aarti Ravi: கர்மா ஒரு பூமராங்.. எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணும்.. ஆர்த்தி ரவி இன்ஸ்டா பதிவு!
சென்னை: நடிகர் ரவி மோகனின் மனைவியும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளுமான ஆர்த்தி ரவி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு கருத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, இவர் தனது அம்மா பற்றி பகிர்ந்து இருக்கும் போஸ்ட் இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.15 ஆண்டுகளாக இணைபிரியாத தம்பதிகளான இருந்த இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, ரவி மோகன், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், ஆர்த்தி ரவி, இதில் உடன்பாடு இல்லை, நான் அவரை சந்தித்து பேச வேண்டும், அதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆர்த்தி ரவி: பல மனவேதனையில் இருந்து மீண்டு வந்துள்ள ஆர்த்தி ரவி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது மகன்களுடன் இருப்பது, டூர் செல்லும் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஒரு பெரிய கடிதத்தை பகிர்ந்துள்ளார். அதில், அம்மா, கடந்த ஆண்டு உங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஒரு சில விஷயங்களால் மக்களின், என் வாழ்க்கை கதையில் நீங்கள் வில்லியாக சித்தரிக்கப்பட்டீர்கள். உங்கள் மீது தவறாகப் பழி சுமத்தப்பட்டது, ஆனால்,அதற்கு யார் பொறுப்பு என்பதை காலம் அமைதியாக தெளிவாக இந்த உலகத்திற்கு சொல்லும்,
கர்மா ஒரு பூமராங்: நீங்கள் உங்கள் குரலை அடக்கிக்கொண்டீர்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல, மாறாக என் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தபோதிலும், நீங்கள் கூச்சலுக்குப் பதிலாக கண்ணியத்தையும், பழிதூற்றுதலுக்குப் பதிலாக நிதானத்தை தேர்ந்தெடுத்தீர்கள். இன்று, நான் உங்களுக்காகப் பேசத் தேர்வு செய்கிறேன். இந்த ஊடகக் கதைக்குக் காரணமானவர்கள் தங்கள் பாடத்தைக் கடினமான முறையில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். கர்மா ஒரு பூமெராங் அம்மா... அது எப்போதும் திரும்பி வரும். மேலும், புது வருடம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இனிமேல், நாங்கள் பின்வாங்கி வேடிக்கை பார்ப்போம், இந்த சர்க்கஸில் நாங்கள் இனி பங்கேற்பாளர்கள் அல்ல.
உங்களுக்கு ஆரோக்கியமான, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டு அமைய வாழ்த்துகிறேன்... கண்ணியம் மதிக்கப்படும் மற்றும் நீதி நிலைநாட்டப்படும் ஒரு ஆண்டாக அது அமையட்டும் என ஆர்த்தி ரவி தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











