கோவா மருத்துவ கல்லூரியில் காஞ்சனா நடிகையின் உடல்.. கடைசி பதிவு.. தற்கொலைக்கான பகீர் காரணம்!

சென்னை: காஞ்சனா பட நடிகையின் தற்கொலைக்கான பகீர் காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ், சரத்குமார், ராய் லக்ஷ்மி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரது நடிப்பில் வெளியான 2011ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து காஞ்சனா சீரிஸ் படங்களை எடுக்க தொடங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா 2 படத்தில் லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3

இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார் ராகவா லாரன்ஸ். இதில் ஓவியா, நிக்கி தம்போலி, வேதிகா, ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா என நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். மேலும் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பிளாஷ் பேக் காதலி ரோஸி

பிளாஷ் பேக் காதலி ரோஸி

இந்தப் படமும் ஹிட்டானது. காஞ்சனா 3 படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ராகவா லாரன்ஸுக்கு காதலியாக ரோஸி என்ற கதாப்பாத்திரத்தில் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா நடித்தார் அலெக்ஸாண்ட்ரா. இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவாவில் ஆண் நண்பருடன் அலெக்ஸாண்ட்ரா

கோவாவில் ஆண் நண்பருடன் அலெக்ஸாண்ட்ரா

கோவாவில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த அலெக்ஸாண்ட்ரா மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். படங்களிலும் நடித்து வந்தார். தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்த அலெக்ஸாண்ட்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

ஃபேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்டு

ஃபேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்டு

ஃபேன் மாட்டும் கொக்கியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அலெக்ஸாண்ட்ரா. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலெக்ஸாண்ட்ராவின் உடலை கைப்பற்றி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதுகாக்கப்படும் காஞ்சனா 3 நடிகையின் உடல்

பாதுகாக்கப்படும் காஞ்சனா 3 நடிகையின் உடல்

அவரது உடல் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சம்மதித்த பிறகே உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. நடிகை அலெக்ஸாண்ட்ரா தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நடிகையின் மரணம் தற்கொலை - தகவல்

நடிகையின் மரணம் தற்கொலை - தகவல்

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் அலெக்ஸாண்ட்ராவின் மரணம் தற்கொலைதான் என கூறப்பட்டது. காதலர் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக ஷேர் செய்து பதிவு வைரல்

கடைசியாக ஷேர் செய்து பதிவு வைரல்

இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில்தான் அலெக்ஸாண்ட்ராவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என தெரியவரும். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்த அலெக்ஸாண்ட்ரா கடைசியாக ஷேர் செய்த பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருங்கால வாழ்கையை காண முடியாமல்

வருங்கால வாழ்கையை காண முடியாமல்

அதில் எல்லோர் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதை பயன்படுத்தி சிறப்பான வாழ்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வருங்கால வாழ்கையை காண முடியாமல் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

காதல் தோல்வியால் பெரும் சோகம்

காதல் தோல்வியால் பெரும் சோகம்

அலெக்ஸாண்ட்ராவின் இந்த கடைசி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அலெக்ஸாண்ட்ரா தனது காதல் தோல்வியால் பெரும் சோகத்தில் இருந்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படக் கலைஞர் பாலியல் துன்புறுத்தல்

புகைப்படக் கலைஞர் பாலியல் துன்புறுத்தல்

நடிகை அலெக்ஸாண்ட்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வருவதாக போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X