தமன்னா - விஜய் வர்மா காதல் பிரேக் அப்.. என்ன காரணம் தெரியுமா?.. பிரச்னை பெருசுதான் போல

சென்னை: தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிகர் விஜய் வர்மாவை தீவிரமாக காதலித்துவந்தார். இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர்களது காதல் முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில் அவர்களது காதல் முடிவுக்கு வந்ததற்கான காரணம் தொடர்பாக பாலிவுட் வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தமிழில் கேடி படத்தில் வில்லியாக நடித்து அறிமுகமானவர் தமன்னா. அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து கல்லூரி படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் தமன்னாவுக்கும் நல்லதொரு பெயர் கிடைத்தது. கல்லூரிக்கு பிறகு தமன்னாவை நோக்கி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் படையெடுக்க ஆரம்பித்தார்கள். அதன்படி அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ரவி மோகன், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

தமன்னா டாப்: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர்; தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். பல வருடங்கள் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார். ஒருபக்கம் தமிழில் பிஸியாக நடித்துவந்த அவர் பிறகு தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் சட்டென குறைய ஆரம்பித்தன.

ஹிந்தியில் தமன்னா: தமிழ், தெலுங்கில் மார்கெட் டல்லடித்ததை பார்த்த அவர்; பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் ஹிந்தியிலும் பிஸியான ஹீரோயினாக மாறினார் அவர். தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்த அவரை; ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட வைத்தார் நெல்சன் திலீப்குமார். அப்படிய ஆடியதை அடுத்து மீண்டும் தமிழ்நாட்டில் சென்சேஷனல் ஆனார். மேலும் அரண்மனை 4 படத்திலும் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அவருக்கு சரளமாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்துவருகிறது. ஒரு சில தமிழ் படங்களில் அவர் தற்போது கமிட்டாகியிருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

Reason why Tamannaah and Vijay Varma broke up Here are Full details

விஜய்யுடன் காதல்: இதற்கிடையே ஹிந்தியில் நடித்தபோது நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்தது. காதலை பொதுவெளியில் அறிவித்துவிட்டாலும் தங்களது திருமணம் குறித்து எதையும் முடிவெடுக்காமல் இருந்தார்கள். அதேசமயம் விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக தெரிகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன காரணம்?: இந்நிலையில் அவர்கள் தங்கள் காதலை முடித்துக்கொண்டதற்கு தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது விரைவில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட தமன்னா நினைத்தார் என்றும்; அதற்கு விஜய் வர்மாவோ இன்னும் சில வருடங்கள் ஆகட்டும்; திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னதாகவும் அதனால்தான் பிரேக் அப் ஆகிவிட்டது என்றும் பரபரப்பாக பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X