இந்தியை புறக்கணிக்கிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்… உண்மை காரணம் என்ன ?

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களை முதன்மையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். தமிழ், தெலுங்கு திரையுலகில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

டிரைவர் ஜமுனா என பெயரிடப்பட்டுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுமை நாயகி

புதுமை நாயகி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்திருப்பார். கடந்த சில வருடங்களாக கதைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிக்கும் புதிய படம் டிரைவர் ஜமுனா. இதில் அவர் டிரைவராக நடித்து இருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. Cab சார்ந்த ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டது போல போஸ்டர்களில் காணப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

எஸ்பி சௌத்ரி தயாரிப்பு

எஸ்பி சௌத்ரி தயாரிப்பு

சந்தானம் கதாநாயகனாக நடித்து 2020ஆம் ஆண்டு ரிலீசான டக்கால்டி படத்தை தயாரித்தவர் எஸ்பி சௌத்ரி. 18 Reels பேனரில் இவர் தயாரிக்கும் அடுத்த படமாக டிரைவர் ஜமுனா வர இருக்கிறது. எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் டிரைவர் ஜமுனா படத்தை இயக்கி வருபவர் P Kinslin. இவர் ஏ ஆர் முருகதாஸ் தயாரித்து அவர் தம்பி திலீபன் கதாநாயகனாக நடித்த வத்திக்குச்சி எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க Road Movie யாக எடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மற்றொரு தரமான படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cab டிரைவர்கள் உடன் உரையாடல்

Cab டிரைவர்கள் உடன் உரையாடல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக பல பெண் கேப் டிரைவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி, அவர்கள் பிரச்சினைகள் தெரிந்து கொண்டு அவர்களது உடல் மொழியை கற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி stand-up காமடியன் அபிஷேக், ராஜா ராணி பட புகழ் பாண்டியன், பாண்டி மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். கூடிய விரைவில் படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க உள்ளது.

இந்தியை புறக்கணிக்கும் படக்குழு

இந்தியை புறக்கணிக்கும் படக்குழு

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வர இருக்கிறது. இந்த படத்தை இந்தியில் கொண்டு செல்லும் எண்ணம் இல்லாதது போல தெரிகிறது . தென்னிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியை புறக்கணித்து உள்ளதாக தெரியவருகிறது. சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் மற்றும் ஹிந்தி மொழி படங்கள் பற்றிய விவாதங்கள் பரவலாக போய்க்கொண்டிருக்கிறது. தென்னிந்திய படங்கள் இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்து வருவதால் ஹிந்தி நடிகர்கள் தென்னிந்திய திரைப்படங்களை விமர்சித்து வருகின்றனர். இதனால் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யாமல், வெறும் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்தி மார்க்கெட்டை நம்பி தென்னிந்திய மொழிப் திரைப்படங்கள் இல்லை என்பதை இந்த முயற்சி தெளிவு படுத்துகிறது.ஹிந்தி மொழி மட்டுமே மார்க்கெட் கிடையாது, என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளனர் "டிரைவர் ஜமுனா" படத்தின் பட குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X