அம்மாவான பிறகும் ஹாட்னஸில் அதிர விடும் ஆலியா பட்.. அந்த கழுத்தில் உள்ள மரகத நெக்லஸ் விலை இவ்வளவா?
மும்பை: ஜீ சினிமா விருதுகள் 2023ல் ஆலியா பட் நடித்த 3 படங்கள் விருதுகளை வாரிக் குவித்தன. சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக தட்டிச் சென்றார் ஆலியா பட்.
ஆனால், அந்த படங்களையும் விருதுகளையும் ரசிகர்கள் மறந்து விட்டு அம்மாவான பிறகு படு கவர்ச்சியாக ஆலியா பட் அணிந்து வந்த உடை பற்றியும் அவர் கழுத்தில் உள்ள அந்த மரகத பச்சைக் கல் பதித்த நெக்லஸ் பற்றியும் தான் நாடு முழுக்க ஒரே பேச்சாக எழுந்துள்ளது.
மேலும், ஆலியா பட் அந்த விருது விழாவுக்கு அணிந்து வந்த உடையின் விலை குறித்தும் அந்த நெக்லஸ் விலை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரடி காட்டிய ஆலியா பட்
கடந்த 2022ம் ஆண்டு பாலிவுட் கப்பல் மூழ்கிக் கிடந்த நிலையில், தனது அசத்தல் நடிப்பால் ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டை காப்பாற்ற போராடினார் ஆலியா பட். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி, ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர், நெட்பிளிக்ஸில் வெளியான டார்லிங்ஸ் மற்றும் கணவர் ரன்பீர் கபூருடன் ஆலியா பட் நடித்த பிரம்மாண்ட படமான பிரம்மாஸ்திரம் என அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தின.

அம்மாவானாலும் ஹாட்னஸ் போகாது
ஜீ சினிமா விருதுகள் ஞாயிறு இரவு கண்ணை பறிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் அணிந்து வந்த ஆடைகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆலியா பட் கவர்ச்சி சிலையாகவே வந்து கலக்கி விட்டார். பெண் குழந்தைக்கு சமீபத்தில் தாயான ஆலியா பட் நீண்ட நாட்கள் பிரெக்னன்ஸி விடுமுறை எடுக்காமல் அதிரடியாக தனது அழகையும் சரி செய்து கொண்டு அம்மாவானாலும் ஹாட்னஸ் போகாது என அந்த நிகழ்ச்சியில் பலரது கண்களையும் வெகுவாக கவர்ந்தார்.

விருதுகளை குவித்த 3 படங்கள்
கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை ஆலியா பட் வென்றார். மேலும், அவர் நடிப்பில் வெளியான டார்லிங்ஸ் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் ஏகப்பட்ட விருதுகளை ஜீ சினிமா விருதுகள் 2023ல் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆலியா பட் வாங்கிய விருதுகளை விட அவர் விழாவில் அணிந்து வந்த ஆடை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த அந்த நெக்லஸ் தான் பலரது இமிடியேட் தேடலாக மாறி உள்ளது.

கவர்ச்சி கவுனில் ஆலியா பட்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ராஹா என அந்த குழந்தைக்கு பெயரிட்டு வளர்த்து வருகிறார் ஆலியா பட். இந்நிலையில், விருது விழாவில் வெளிர் பச்சை நிற கவர்ச்சி கவுனில் விருது விழாவில் கலந்து கொண்டு அனைவரது தலையையும் தன் பக்கம் திருப்ப வைத்து மாஸ் காட்டினார்.

கவுன் விலை இவ்வளவா
Costarellos எனும் பிரபல ஃபேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்த உடை தயாரிக்கப்பட்டு ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உடையின் விலை மட்டும் € 1,965.00 பவுண்ட் என்றும் இந்திய மதிப்பில் 1,72,003.07 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் உடையை அணிந்து கொண்டு ஜீ விருது விழாவில் பங்கேற்றுள்ளாரா ஆலியா பட் என பலரும் வாய் பிளந்துள்ளனர்.

மரகத நெக்லஸ்
முன்னழகு எடுப்பாக தெரியும் படி உள்ள கவர்ச்சி கவுனை தாண்டி பலரது பார்வையை கவர்ந்தது அந்த மரகத நெக்லஸ் தான் என்கின்றனர். அந்த நெக்லஸின் விலை மட்டும் சில கோடிகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலியா பட்டின் இந்த லேட்டஸ்ட் விருது புகைப்படங்கள் இணையத்தில் தீயாக டிரெண்டாகி வருகின்றன.

வொண்டர் உமன் உடன் இணைந்து
தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த நயன்தாரா, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், ராஷி கன்னா, ராஷ்மிகா மந்தனா என பலரும் பாலிவுட் படையெடுத்து வரும் நிலையில், பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே தொடர்ந்து தற்போது ஆலியா பட்டும் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். வொண்டர் உமன் ஹீரோயின் கால் கடோட் நடிப்பில் உருவாகி வரும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட்.


Click it and Unblock the Notifications











