ரீலில் மட்டுமில்ல ரியலிலும் தீபிகா படுகோனே போல்டு தான்.. பிரபல தமிழ் நடிகை பாராட்டு!
Recommended Video
சென்னை: ரீலில் மட்டுமில்ல ரியலிலும் தீபிகா படுகோனே போல்டான பெண் தான் என நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதியில் மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாலிவுட் நடிகர்கள் மெளனம் காத்து வந்த நிலையில், தீபிகா படுகோனே நேரடியாக களத்தில் சென்று மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இதனால், தீபிகா படுகோனேவின் சபாக் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் புறக்கணிக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
திட்டமிட்டபடி ரிலீசாகுமா?
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தீபிகா படுகோனே தயாரித்து நடித்துள்ள படம் சபாக். இந்த படம் உலகமெங்கும் நாளை ரிலீசாகிறது. ஆனால், தீபிகா படுகோனேவுக்கு எதிராக தொடர்ந்து #Boycott_Chhapaak என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்து மதத்திற்கு எதிராக
மேலும், தீபிகா படுகோனே இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சபாக் படத்தில் வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் பூதாகரமாக எழுந்துள்ளது. லக்ஷ்மி அகர்வால் மீது ஆசிட் அடித்தது ஒரு முஸ்லீம் என்றும் ஆனால், சபாக் படத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆசிட் அடித்திருப்பது போன்று கதையை திரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

சப்போர்ட்டுக்கும் பஞ்சமில்லை
பாலிவுட்டில் தீபிகா படுகோனேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் இருக்கிறதோ அதைவிட அதிகளவில் ஆதரவுகளும் பெருகி வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மெளனம் காத்து வரும் நிலையில், தனது படம் வெளியாகாமல் போனால் கூட பரவாயில்லை என மாணவர்களுக்காக குரல் கொடுத்த தீபிகாவுக்கு ஆதரவு கரங்களும் நீண்டு வருகின்றன.
செம காமெடி
தீபிகா படுகோனேவின் சபாக் படத்தின் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன் என பலரும் ஒரே டிக்கெட் புகைப்படத்தை ஷேர் செய்து செம காமெடி செய்து வருகின்றனர். இதுதானாடா உங்க பாய்காட் சபாக் என தீபிகா ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.
மஞ்சிமா பாராட்டு
தீபிகா படுகோனே ரீலில் மட்டுமல்ல ரியலில் போல்டான பெண் தான் நடிகை மஞ்சிமா மோகன் தனது ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். மஞ்சிமா மோகனின் இந்த பதிவுக்கும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











