»   »  தாம் தூம் ரீமா டமால்!

தாம் தூம் ரீமா டமால்!

Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்ட ரீமா சென் திடீரென ஜகா வாங்கி விட்டதால் ஷூட்டிங் நின்று போய் விட்டதாம்.

12பி, உள்ளம் கேட்குதே ஆகிய படங்களை இயக்கிய, ஒளிப்பதிவாளர் ஜீவா, அடுத்து இயக்கும் படம் உன்னாலே உன்னாலே. இப்படம் முடிந்துகிட்டத்தட்ட விட்டது. இதைத் தொடர்ந்து தாம் தூம் என்ற படத்தை இயக்குகிறார் ஜீவா.

முதல் மூன்று படங்களையும் அழகான காதல் படங்களாக எடுத்த ஜீவா, தாம் தூம் படத்தை ஆக்ஷன் படமாக உருவாக்குகிறார். ஜெயம் ரவிதான்ஹீரோ.

இதில் ரவி, உடற்பயிற்சி இயக்குநராக வருகிறாராம். படத்தின் பெரும் பகுதியை ரஷியாவில் வைத்து சுடவுள்ளனர். அவருக்கு இரண்டுஹீரோயின்கள்.

அவர்களில் ஒருவருக்கு கிளாமர் சைடு ஜாஸ்தியாம். சூப்பர் சூடான முத்தக் காட்சியும் இருக்கிறதாம். இந்த கேரக்டரில் நடிக்க ரீமா சென்னைஅணுகினர். அவரிடம் முத்தக் காட்சி மற்றும் கிளாமர் காட்சிகளை விளக்கிக் கூறியுள்ளனர். அவரும் ஒத்துக் கொண்டாராம்.

ஆனால் இப்போது விலகி விட்டாராம். ஏன் இந்த விலகல் என்பதற்கு உரிய காரணத்தை சொல்லவில்லையாம் ரீமா. படத்தில் ரீமாவுக்கெனதனியாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லையாம். இதனால்தான் அவர் விலகி விட்டார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மழை படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ஷ்ரியாவைக் கேட்டுப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் நிறைய சம்பளம் கேட்டதால்விட்டு விட்டார்கள். கிடைத்த ரீமாவும், சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆகி விட்டார். அடுத்து யாரைப் பிடிப்பது என்ற குழப்பத்தில் உள்ளாராம் ஜீவா.

ரவிக்கு ஜோடி கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil