»   »  ரீமாவும் ஷ்ரேயா ரெட்டியும்! செல்லமேவுக்குப் பிறகு விஷாலும், ரீமா சென்னும் மீண்டும் திமிரப் போகிறார்கள்,திமிரு படம் மூலம்.விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க சண்டைக்கோழி என்ற படத்தைத் தயாரித்த விஷாலின்அப்பா விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம்தான் திமிரு.செல்லமே, சண்டைக் கோழி என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளஜி.கே.பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார் விக்ரம் கிருஷ்ணா.விஷால்தான் ஹீரோ, செல்லமே படத்தில் விஷாலுடன் சரி ஜோடியாக அடித்துக்கலக்கிய ரீமா சென் மீண்டும் விஷாலுடன் ஜோடி போடுகிறார். கூடவே, ஷ்ரேயாரெட்டி (ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரேயா அல்ல) என்ற தெலுங்குக்குதிரையையும் பக்க பலமாக ஜோடி சேர்த்துள்ளார்.இந்த ஷ்ரேயா ரெட்டி எஸ்.எஸ். மியூசிக் சேனலின் வி.ஜே. தனது ஹஸ்கி வாய்சாலும்,மடக்கிப் போடும் ஸ்டரக்சராலும், குட்டை பாவாடை, சின்னச் சின்ன சட்டைகளாலும்,திமிரும் அழகு சமாச்சாரங்களாலும் ஜொள்ளர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர். செல்லமே படத்தின்போதே, விஷாலும், ரீமாவும் நடிப்புக்காக தனிப்பட்டமுறையிலும் சிறப்பாக பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். காதல் வயப்படுவது,நெருக்கமாக நடிப்பது குறித்து இருவருக்கும் தனிப்பயிற்சி தரப்பட்டது.இதனால் நெருக்கமான காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துக் கலக்கினார்கள்இருவரும். (இதுக்கெல்லாம் பயிற்சி வேற வேணுமா என்ன?)விஷாலும், ரீமாவும் அசல், புருஷன், பொண்டாட்டி போலவே நடித்திருப்பதாகபெருவாரியாக பாராட்டப்பட்டனர். அதே ஜோடி மீண்டும் திமிரு மூலம் ஜோடிசேருவதால் இப்படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.வல்லவன் எப்போது ரிலீஸாகும் என்று தெரியாமல் கடுப்பாகிக் கிடக்கும் ரீமா, திமிருவாய்ப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை அசத்தி விட ஆர்வமாக உள்ளார்.கவர்ச்சிக்கு ரீமாவே போதும் என்றாலும் கூடுதலாக இருந்தால் என்ன தப்பு என்றஅடிப்படையில் ஷ்ரேயா ரெட்டியையும் கூட்டி வருகிறார்கள்.இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். ஆனால் தனது கவர்ச்சி அலையால்ஏற்கனவே டோலிவுட்டையும் கொஞ்சமாய் மலையாள சினிமாவையும் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் ஷ்ரேயா ரெட்டி.தருண்கோபி இப்படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.காமெடியனாக வடிவேலுவும், வில்லனாக மனோஜ் கே. ஜெயனும் நடிக்கிறார்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தக் கால ஹீரோ பானுசந்தர் முக்கிய வேடத்தில்படத்தில் தலை காட்டுகிறார்.திமிர் கலந்த காதல்தான் படத்தின் கதையாம். எனவே கலக்கலுக்குப் பஞ்சமிருக்காது.செல்லமே ரேஞ்சுக்கு விஷாலும், ரீமாவும் இதில் புகுந்து விளையாடுவார்கள் என்றநம்பிக்கையுடன், கூடுதலாக ஷ்ரேயாவையும் ரசிக்கத் தயாராவோம்.

ரீமாவும் ஷ்ரேயா ரெட்டியும்! செல்லமேவுக்குப் பிறகு விஷாலும், ரீமா சென்னும் மீண்டும் திமிரப் போகிறார்கள்,திமிரு படம் மூலம்.விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க சண்டைக்கோழி என்ற படத்தைத் தயாரித்த விஷாலின்அப்பா விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம்தான் திமிரு.செல்லமே, சண்டைக் கோழி என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளஜி.கே.பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார் விக்ரம் கிருஷ்ணா.விஷால்தான் ஹீரோ, செல்லமே படத்தில் விஷாலுடன் சரி ஜோடியாக அடித்துக்கலக்கிய ரீமா சென் மீண்டும் விஷாலுடன் ஜோடி போடுகிறார். கூடவே, ஷ்ரேயாரெட்டி (ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரேயா அல்ல) என்ற தெலுங்குக்குதிரையையும் பக்க பலமாக ஜோடி சேர்த்துள்ளார்.இந்த ஷ்ரேயா ரெட்டி எஸ்.எஸ். மியூசிக் சேனலின் வி.ஜே. தனது ஹஸ்கி வாய்சாலும்,மடக்கிப் போடும் ஸ்டரக்சராலும், குட்டை பாவாடை, சின்னச் சின்ன சட்டைகளாலும்,திமிரும் அழகு சமாச்சாரங்களாலும் ஜொள்ளர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர். செல்லமே படத்தின்போதே, விஷாலும், ரீமாவும் நடிப்புக்காக தனிப்பட்டமுறையிலும் சிறப்பாக பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். காதல் வயப்படுவது,நெருக்கமாக நடிப்பது குறித்து இருவருக்கும் தனிப்பயிற்சி தரப்பட்டது.இதனால் நெருக்கமான காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துக் கலக்கினார்கள்இருவரும். (இதுக்கெல்லாம் பயிற்சி வேற வேணுமா என்ன?)விஷாலும், ரீமாவும் அசல், புருஷன், பொண்டாட்டி போலவே நடித்திருப்பதாகபெருவாரியாக பாராட்டப்பட்டனர். அதே ஜோடி மீண்டும் திமிரு மூலம் ஜோடிசேருவதால் இப்படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.வல்லவன் எப்போது ரிலீஸாகும் என்று தெரியாமல் கடுப்பாகிக் கிடக்கும் ரீமா, திமிருவாய்ப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை அசத்தி விட ஆர்வமாக உள்ளார்.கவர்ச்சிக்கு ரீமாவே போதும் என்றாலும் கூடுதலாக இருந்தால் என்ன தப்பு என்றஅடிப்படையில் ஷ்ரேயா ரெட்டியையும் கூட்டி வருகிறார்கள்.இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். ஆனால் தனது கவர்ச்சி அலையால்ஏற்கனவே டோலிவுட்டையும் கொஞ்சமாய் மலையாள சினிமாவையும் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் ஷ்ரேயா ரெட்டி.தருண்கோபி இப்படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.காமெடியனாக வடிவேலுவும், வில்லனாக மனோஜ் கே. ஜெயனும் நடிக்கிறார்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தக் கால ஹீரோ பானுசந்தர் முக்கிய வேடத்தில்படத்தில் தலை காட்டுகிறார்.திமிர் கலந்த காதல்தான் படத்தின் கதையாம். எனவே கலக்கலுக்குப் பஞ்சமிருக்காது.செல்லமே ரேஞ்சுக்கு விஷாலும், ரீமாவும் இதில் புகுந்து விளையாடுவார்கள் என்றநம்பிக்கையுடன், கூடுதலாக ஷ்ரேயாவையும் ரசிக்கத் தயாராவோம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்லமேவுக்குப் பிறகு விஷாலும், ரீமா சென்னும் மீண்டும் திமிரப் போகிறார்கள்,திமிரு படம் மூலம்.

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க சண்டைக்கோழி என்ற படத்தைத் தயாரித்த விஷாலின்அப்பா விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம்தான் திமிரு.

செல்லமே, சண்டைக் கோழி என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளஜி.கே.பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார் விக்ரம் கிருஷ்ணா.

விஷால்தான் ஹீரோ, செல்லமே படத்தில் விஷாலுடன் சரி ஜோடியாக அடித்துக்கலக்கிய ரீமா சென் மீண்டும் விஷாலுடன் ஜோடி போடுகிறார். கூடவே, ஷ்ரேயாரெட்டி (ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரேயா அல்ல) என்ற தெலுங்குக்குதிரையையும் பக்க பலமாக ஜோடி சேர்த்துள்ளார்.


இந்த ஷ்ரேயா ரெட்டி எஸ்.எஸ். மியூசிக் சேனலின் வி.ஜே. தனது ஹஸ்கி வாய்சாலும்,மடக்கிப் போடும் ஸ்டரக்சராலும், குட்டை பாவாடை, சின்னச் சின்ன சட்டைகளாலும்,திமிரும் அழகு சமாச்சாரங்களாலும் ஜொள்ளர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர்.

செல்லமே படத்தின்போதே, விஷாலும், ரீமாவும் நடிப்புக்காக தனிப்பட்டமுறையிலும் சிறப்பாக பயிற்சி கொடுக்கப்பட்டார்கள். காதல் வயப்படுவது,நெருக்கமாக நடிப்பது குறித்து இருவருக்கும் தனிப்பயிற்சி தரப்பட்டது.

இதனால் நெருக்கமான காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துக் கலக்கினார்கள்இருவரும். (இதுக்கெல்லாம் பயிற்சி வேற வேணுமா என்ன?)

விஷாலும், ரீமாவும் அசல், புருஷன், பொண்டாட்டி போலவே நடித்திருப்பதாகபெருவாரியாக பாராட்டப்பட்டனர். அதே ஜோடி மீண்டும் திமிரு மூலம் ஜோடிசேருவதால் இப்படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.


வல்லவன் எப்போது ரிலீஸாகும் என்று தெரியாமல் கடுப்பாகிக் கிடக்கும் ரீமா, திமிருவாய்ப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை அசத்தி விட ஆர்வமாக உள்ளார்.

கவர்ச்சிக்கு ரீமாவே போதும் என்றாலும் கூடுதலாக இருந்தால் என்ன தப்பு என்றஅடிப்படையில் ஷ்ரேயா ரெட்டியையும் கூட்டி வருகிறார்கள்.

இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். ஆனால் தனது கவர்ச்சி அலையால்ஏற்கனவே டோலிவுட்டையும் கொஞ்சமாய் மலையாள சினிமாவையும் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் ஷ்ரேயா ரெட்டி.


தருண்கோபி இப்படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.காமெடியனாக வடிவேலுவும், வில்லனாக மனோஜ் கே. ஜெயனும் நடிக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தக் கால ஹீரோ பானுசந்தர் முக்கிய வேடத்தில்படத்தில் தலை காட்டுகிறார்.

திமிர் கலந்த காதல்தான் படத்தின் கதையாம். எனவே கலக்கலுக்குப் பஞ்சமிருக்காது.செல்லமே ரேஞ்சுக்கு விஷாலும், ரீமாவும் இதில் புகுந்து விளையாடுவார்கள் என்றநம்பிக்கையுடன், கூடுதலாக ஷ்ரேயாவையும் ரசிக்கத் தயாராவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil