ரீமா கல்லிங்கல் திருணம் - கேன்சர் நோயாளிகளுக்காக ரூ 10 லட்சம் நன்கொடை!

By Shankar

கொச்சி: பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கும் இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் இன்று திருமணம் நடந்தது.

எளிமையாக தன் திருமணத்தை நடத்திய ரீமா - ஆஷிக் தம்பதி, தங்களின் திருமணத்தையொட்டி, கேரள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ 10 லட்சம் நன்கொடை வழங்கினர்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் ரீமா கல்லிங்கல். 2009-ம் ஆண்டு 'ரிது' என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் யுவன் யுவதியில் நடித்தார்.

காதல்

காதல்

கடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை ஆஷிக் அபு இயக்கினார். அப்போது இருவருக்கும் காதல் பூத்தது. இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

இந்நிலையில் சமீபத்தில் ரீமா கல்லிங்கல் அளித்த பேட்டியில் நானும், ஆஷிக் அபுவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம். எங்களது திருமணம் எளிமையாக நடக்கும் என்றார்.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

அதன்படி ரீமா கல்லிங்கல் -ஆஷிக்அபு திருமணம் இன்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரூ 10 லட்சம் நன்கொடை

ரூ 10 லட்சம் நன்கொடை

முன்னதாக ரீமா கல்லிங்கல் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சத்தை மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார். பொதுவாக திருமணத்துக்கு பரிசு பெறுபவர்களுக்கு மத்தியில், இவர் ரூ 10 லட்சம் நன்கொடை கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்தார் அந்த மருத்துவர்.

மன நிறைவுக்காக

மன நிறைவுக்காக

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த தொகை பெரிதல்ல என எனக்கு தெரியும். ஆனால் எங்கள் மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம். திருமணத்தின்போது செய்த ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X