வல்லவன் ரீமா சென்னை மறக்க முடியுமா? இப்போ அவருக்கு எவ்ளோ பெரிய பையன் இருக்காருன்னு பாருங்க!
சென்னை: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த மின்னலே படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரீமா சென் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.
ஆனால், தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
மின்னலே, பகவதி, தூள், செல்லமே, கிரி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரீமா சென் வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

வேறென்ன வேறென்ன வேண்டும்
மின்னலே படத்தில் மாதவன் கொட்டும் மழையில் அடிக்கும் ஒரு மின்னலில் ரீமா சென்னை பார்த்து எப்படி காதலில் விழுந்தாரோ கோலிவுட் ரசிகர்களும் ரீமா சென் மீது அந்த கணத்திலேயே காதலில் விழுந்தனர். வேறென்ன வேறென்ன வேண்டும், வெண்மதி வெண்மதியே நில்லு என ஹாரீஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களை முணுமுணுக்காமலும், ரீமா சென் போட்டோக்களை வால் பேப்பர்களாக வைக்காத 90ஸ் கிட்ஸும் இருந்திருக்கவே முடியாது.

அந்த டவல் டான்ஸ்
மின்னலே படத்தில் க்யூட் கேர்ளாக வந்த ரீமா சென் பகவதி, தூள் படங்களிலும் அதே போலவே நடித்துச் சென்றார். ரீமா சென்னின் வேற லெவல் நடிப்பு விஷால் நடித்த செல்லமே படத்தின் மூலமாகவே வெளிப்பட்டது. கவர்ச்சிக்கும் கவர்ச்சியும், நடிப்புக்கு நடிப்பும் தன்னால் தர முடியும் என அந்த படத்தில் நிரூபித்துக் காட்டியிருப்பார். அதிலும், அந்த வெள்ளைக்கார முத்தம் பாடலில் குளித்து முடித்து விட்டு வெறும் டவல் கட்டிக் கொண்டே ஆடியிருப்பார். எப்போதான் அது கழண்டு விழும் என்று ரசிகர்கள் தவியாய் தவித்து இருப்பார்கள்.

வல்லவன் கீதாவை மறக்க முடியுமா
சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இருந்தார். வில்லியாக ரீமா சென் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையே மிரட்டி எடுத்து இருந்தார். கீதா கதாபாத்திரத்தில் சிம்புவின் பள்ளிப்பருவ காதலியாக நடித்த ரீமா சென் நீலாம்பரி ரேஞ்சுக்கு நடிப்பில் மெர்சல் காட்டி இருப்பார்.

தொழிலதிபருடன் திருமணம்
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்த ரீமா சென் 2012ம் ஆண்டு ஷிவ் கரண் சிங் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். 2013ம் ஆண்டே ரீமா சென்னுக்கு ருத்ரவீர் எனும் ஆண் குழந்தை பிறந்தது.

10 வயதில் மகன்
பிப்ரவரி 22ம் தேதி தனது மகனுக்கு 10 வயது ஆனதை கொண்டாடிய நடிகை ரீமா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் சிறு வயது முதல் தற்போதைய புகைப்படங்கள் வரை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். 41 வயதாகும் நடிகை ரீமா சென்னுக்கு 10 வயதில் இப்படியொரு அழகான மகன் உள்ளாரா என அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செம க்யூட்
அப்படியே அம்மா ரீமா சென்னை போலவே செம அழகாக ருத்ரவீர் உள்ளார் என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். செம க்யூட் என்றும் ஹேப்பி பர்த்டே ருத்ரா என்றும் ரசிகர்களும் பிரபலங்களும் ரீமா சென் பதிவிட்ட பிறந்தநாள் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











