ரீமா சென் இனி ரீம்மா!

By Staff

Reema Sen
ராசிக்காகவோ என்னவோ தனது பெயரை மாற்றி விட்டார் ரீமா சென். இனிமேல் அவரது பெயர் ரீ்ம்மா மட்டுமே, சென் கட் ஆகி விட்டது.

ரீம்மா கையில் இப்போது இருக்கும் ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். அது எப்போது வரும் என்று அந்த ஆண்டவனுக்கே கூட சரியாகத் தெரியவில்லை.

இந்தப் படத்தில் தனது கேரக்டர் பவர்புல்லாக இருந்ததால் படத்தின் தொடர் தாமதத்தைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார் ரீம்மா. ஆனால் படம் எப்போது வரும் என்பதே தெரியாமல் இருப்பதால் சலித்துப் போய் விட்டார் இதுகுறித்து கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளித்து.

இருப்பினும் இந்தப் படத்தால் தனது மார்க்கெட் வேகமாக உயர்ந்து விடும், பெரும் பெயர் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார் ரீம்மா.

சரி உங்களோட கேரக்டர் குறித்து சொல்லுங்களேன் என்று கேட்டால், அனைத்து அம்சங்களும் நிறைந்த பெண்ணாக இதில் வருகிறேன். அமைதியானவள், ஆக்ரோஷமானவள், மயக்கும் சாகசக்காரி, பிடிவாதக்காரி என எல்லாமே கலந்த கலவைதான் இப்படத்தில் நான் ஏற்றுள்ள பாத்திரம். வித்தியாசமான கேரக்டர், இப்படி இதுவரை நடித்ததில்லை என்று புளகாங்கிதப்படுகிறார் ரீம்மா.

இனிமேல் டப்பா கேரக்டர்களில் நடிக்க மாட்டாராம் ரீம்மா. நடிக்க வலுவள்ள பாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ரீம்மா. வெறும் கவர்ச்சி காட்டிக் கொண்டு மட்டுமே நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. அறிவுப்பூர்வமான கவர்ச்சிக்கே இனி எனது ஓட்டு என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X