எனக்கு நானே ...!
| Click here for more images |
எனக்கு யாரும் போட்டி கிடையாது. நான்தான் எனக்குப் போட்டி என்று சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்குப் பேசி வருகிறார் ரீமா சென்.
ரஜினிக்கு வேறு யாரும் போட்டி கிடையாது. அவரது முந்தைய படம்தான் போட்டி என்று திரையுலகில் கூறுவார்கள். இப்போது ரஜினி ரேஞ்சுக்கு ரீமா சென்னும் பேச ஆரம்பித்துள்ளார். எனக்கு வேறு யாரும் போட்டி கிடையாது, நானேதான் போட்டி என்று பேசி வருகிறாராம் ரீமா.
மாதவன், விக்ரம் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்த ரீமாசென், பின்னர் விஷாலுடன் திமிரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்த ரீமாசென்னை விட, அதில் சிறிது நேரம் வந்துபோகும் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை தான் எல்லோரும் பேசினார்கள்.
இருந்தாலும் ரீமாவின் ஒத்துழைப்பால் படவாய்ப்புகள் அவரை விட்டு போகாமல் இருக்கிறது. இந்த ஒத்துழைப்பு தான் அவருக்கு செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் பட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளதாம்.
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் இருந்த அவரிடம், உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டுள்ளார். அதற்குப் பதில் வரவில்லை. மாறாக, சில்லறைக் காசுகளை கொட்டிக் கவிழ்ந்தது போல கொஞ்ச விநாடி சிரித்துள்ளார் ரீமா.
தப்பா கேட்டுட்டோமோ என்று அந்த நிருபர் கொஞ்சம் போல பயந்துள்ளார். ஆனால், ரீமா அவரின் பயத்தைப் போக்கும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.
அப்படியெல்லாம் யாரையும் நினைக்கவில்லை. ஒரே ஒருவரை மட்டும் தான் போட்டியாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். யாரு அது என்று மறுபடியும் நிருபர் கேட்க, நான் தான், நானேதான் என்று ரீமா சொல்ல நிருபர் 'டர்' ஆகியுள்ளார்.
தொடர்ந்த ரீமா, எனக்கு நான் தான் போட்டி. வேறு எவரும் கிடையாது என்று கூறினாராம். அதற்கு மேலும் அங்கு அந்த நிருபர் இருந்திருப்பாரா, என்ன!. குழம்பிப் போய் கிளம்பிப் போய் விட்டாராம்.
நமக்கு நாமே தெரியும், இது என்ன எனக்கு நானே?. ரொம்பப் புதுசாவுல்ல இருக்கு!


Click it and Unblock the Notifications











