»   »  சென்னையில் குடியேறும் ரீமா! அழகு, கட்டுடல், கவர்ச்சிக்கு எப்போதும் பச்சைக் கொடி. இப்படி பல்வேறு ப்ளஸ்கள் இருந்தாலும், சென்னையில் தங்காமல் மும்பையிலிருந்து வந்துசெல்வதாலேயே தனக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்று டூ லேட்டாக யோசித்து உணர்ந்து கொண்ட ரீமா சென் சென்னைக்கே இடம்பெயர்ந்துவிட முடிவெடுத்துள்ளார்.மின்னலே மூலம் தமிழில் அறிமுகமானவர் ரீமா, முதல் படத்தில் சற்றே அடக்கி வாசித்தார்.அடுத்து வந்த படங்களில் தனது திறமைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். கணக்கே இல்லாமல் ரீமா சென் காட்டியகிளாமரால் கோலிவுட் தயாரிப்பாளர்கள், ரீமாவைத் தேடி ஓட ஆரம்பித்தனர்.அலாதி ஆசைகளுடனும், பெருத்த டப்புடனுன் தன்னை அணுகிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டார்ரீமா.அடுத்தடுத்து படங்கள் ஹிட் ஆக, தெலுங்கில் இருந்தும் ஆட்கள் தேடி வர ஆரம்பித்தனர். தமிழைவிட இரண்டுமடங்கு சம்பளம் தந்ததால் தெலுங்கு பக்கமாக ஒதுங்க ஆரம்பித்தார். தெலுங்கில் மார்கெட் தளர்ந்ததும் தமிழுக்குவந்தார்.ஆனால், தெலுங்கு சம்பளத்தை தமிழிலும் கேட்டார். அத்தோடு ஏகப்பட்ட செலவுகளையும் தயாரிப்பாளர்கள்தலை மேல் சுமத்தினார்.மும்பையிலிருந்து வந்து போக விமான டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்குரிய செலவுகள்,ஷாப்பிங் போக ஆகும் செலவு, ஏசி லேன்சர் கார், ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் என ரீமா அடுக்கிக் கொண்டேபோக, அவரை புக் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் அழுது கொண்டே திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டது.இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தும், எதையும் தாங்கும் இரும்பு உள்ளம் கொண்ட சில தயாரிப்பாளர்களும்இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புண்ணியத்தால் வல்லவன், இவன் யாரோ உள்பட அவ்வப்போது சிலபடங்களில் நடித்து வருகிறார் ரீமா சென்.வல்லவன் படத்தில் கூட சிம்புவை அணுகி ரீமா கேட்டதால் வாய்ப்பு கிடைத்ததாம். அதில் ரீமா ஹீரோயின்அல்ல. கிளாமர் பிளஸ் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.இவன் யாரோ இழுத்துக் கொண்டே போவதால், வல்லவனை முடித்து விட்டு என்ன செய்யப் போகிறோம் என்றவருத்தம் ரீமாவுக்கு இப்போதே வந்துவிட்டது போலும்.இதனால் சூட்டிங் முடிந்து திரும்பியதும் தன்னுடன் நடித்த ஹீரோக்கள், மற்றும் முன்னணி டைரக்டர்கள்,தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறார். ஆனால், பெரும் முயற்சிக்குப் பின் ஒரே ஒருவாய்ப்பு தான் கிடைத்தது.புதியவர் சசிகாந்த் என்ற புதுமுக கதாநா-யகனுடன் 1-4-3 என்ற படம் மட்டுமே ரீமாவுக்கு சிக்கியது. முன்னணி நிறுவனங்கள்,இயக்குனர்கள் யாரும் இவருக்கு வாய்ப்பு தர முன் வரவில்லை.இதையடுத்து பிஆர்ஓக்கள் சிலரைப் பிடித்து வாய்ப்பு வாங்கித் தருமாறு கமிஷன் அடிப்படையில் ரீமா பேச,உங்களிடம் எல்லாம் இருந்தாலும் நீங்கள் அதிக செலவு வைப்பதால் தான் தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லைஎன நெளிந்தவாரே உண்மையைச் சொன்னார்களாம்.மேலும் ரீமாவுடன் நடித்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட நடிகரும், நீ ஒவ்வொரு தடவையும்மும்பையிலிருந்து வந்து போவதால் ஏற்படும் செலவுகளை தாங்க முடியாத காரணத்தால்தான் தயாரிப்பாளர்கள்உன்னிடமிருந்து ரொம்ப தூரம் தள்ளியிருக்கிறார்கள். இதனால் தான் நான் கூட உனக்கு ரெக்கமெண்ட் செய்யமுடியவில்லை என்று விசனப்பட்டாாரம்.இதையடுத்து ரீமா உடனே சென்னைக்கு ஜாகையை மாற்ற முடிவு செய்துள்ளார்.சட்டு புட்டென்று தனது முடிவை அமல்படுத்த சூப்பராக ஒரு வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு நல்ல பங்களா தேடும் வேலையில் சில பிஆர்ஓக்களே களமிறங்கியிருக்கிறார்கள். ஆவணியில் பால்காய்ச்சி, தமிழ் சினிமாவில் மீண்டும் ஆட்டம் காட்ட தயாராகி வருகிறார் ரீமா.

சென்னையில் குடியேறும் ரீமா! அழகு, கட்டுடல், கவர்ச்சிக்கு எப்போதும் பச்சைக் கொடி. இப்படி பல்வேறு ப்ளஸ்கள் இருந்தாலும், சென்னையில் தங்காமல் மும்பையிலிருந்து வந்துசெல்வதாலேயே தனக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்று டூ லேட்டாக யோசித்து உணர்ந்து கொண்ட ரீமா சென் சென்னைக்கே இடம்பெயர்ந்துவிட முடிவெடுத்துள்ளார்.மின்னலே மூலம் தமிழில் அறிமுகமானவர் ரீமா, முதல் படத்தில் சற்றே அடக்கி வாசித்தார்.அடுத்து வந்த படங்களில் தனது திறமைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். கணக்கே இல்லாமல் ரீமா சென் காட்டியகிளாமரால் கோலிவுட் தயாரிப்பாளர்கள், ரீமாவைத் தேடி ஓட ஆரம்பித்தனர்.அலாதி ஆசைகளுடனும், பெருத்த டப்புடனுன் தன்னை அணுகிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டார்ரீமா.அடுத்தடுத்து படங்கள் ஹிட் ஆக, தெலுங்கில் இருந்தும் ஆட்கள் தேடி வர ஆரம்பித்தனர். தமிழைவிட இரண்டுமடங்கு சம்பளம் தந்ததால் தெலுங்கு பக்கமாக ஒதுங்க ஆரம்பித்தார். தெலுங்கில் மார்கெட் தளர்ந்ததும் தமிழுக்குவந்தார்.ஆனால், தெலுங்கு சம்பளத்தை தமிழிலும் கேட்டார். அத்தோடு ஏகப்பட்ட செலவுகளையும் தயாரிப்பாளர்கள்தலை மேல் சுமத்தினார்.மும்பையிலிருந்து வந்து போக விமான டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்குரிய செலவுகள்,ஷாப்பிங் போக ஆகும் செலவு, ஏசி லேன்சர் கார், ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் என ரீமா அடுக்கிக் கொண்டேபோக, அவரை புக் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் அழுது கொண்டே திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டது.இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தும், எதையும் தாங்கும் இரும்பு உள்ளம் கொண்ட சில தயாரிப்பாளர்களும்இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புண்ணியத்தால் வல்லவன், இவன் யாரோ உள்பட அவ்வப்போது சிலபடங்களில் நடித்து வருகிறார் ரீமா சென்.வல்லவன் படத்தில் கூட சிம்புவை அணுகி ரீமா கேட்டதால் வாய்ப்பு கிடைத்ததாம். அதில் ரீமா ஹீரோயின்அல்ல. கிளாமர் பிளஸ் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.இவன் யாரோ இழுத்துக் கொண்டே போவதால், வல்லவனை முடித்து விட்டு என்ன செய்யப் போகிறோம் என்றவருத்தம் ரீமாவுக்கு இப்போதே வந்துவிட்டது போலும்.இதனால் சூட்டிங் முடிந்து திரும்பியதும் தன்னுடன் நடித்த ஹீரோக்கள், மற்றும் முன்னணி டைரக்டர்கள்,தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறார். ஆனால், பெரும் முயற்சிக்குப் பின் ஒரே ஒருவாய்ப்பு தான் கிடைத்தது.புதியவர் சசிகாந்த் என்ற புதுமுக கதாநா-யகனுடன் 1-4-3 என்ற படம் மட்டுமே ரீமாவுக்கு சிக்கியது. முன்னணி நிறுவனங்கள்,இயக்குனர்கள் யாரும் இவருக்கு வாய்ப்பு தர முன் வரவில்லை.இதையடுத்து பிஆர்ஓக்கள் சிலரைப் பிடித்து வாய்ப்பு வாங்கித் தருமாறு கமிஷன் அடிப்படையில் ரீமா பேச,உங்களிடம் எல்லாம் இருந்தாலும் நீங்கள் அதிக செலவு வைப்பதால் தான் தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லைஎன நெளிந்தவாரே உண்மையைச் சொன்னார்களாம்.மேலும் ரீமாவுடன் நடித்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட நடிகரும், நீ ஒவ்வொரு தடவையும்மும்பையிலிருந்து வந்து போவதால் ஏற்படும் செலவுகளை தாங்க முடியாத காரணத்தால்தான் தயாரிப்பாளர்கள்உன்னிடமிருந்து ரொம்ப தூரம் தள்ளியிருக்கிறார்கள். இதனால் தான் நான் கூட உனக்கு ரெக்கமெண்ட் செய்யமுடியவில்லை என்று விசனப்பட்டாாரம்.இதையடுத்து ரீமா உடனே சென்னைக்கு ஜாகையை மாற்ற முடிவு செய்துள்ளார்.சட்டு புட்டென்று தனது முடிவை அமல்படுத்த சூப்பராக ஒரு வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு நல்ல பங்களா தேடும் வேலையில் சில பிஆர்ஓக்களே களமிறங்கியிருக்கிறார்கள். ஆவணியில் பால்காய்ச்சி, தமிழ் சினிமாவில் மீண்டும் ஆட்டம் காட்ட தயாராகி வருகிறார் ரீமா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகு, கட்டுடல், கவர்ச்சிக்கு எப்போதும் பச்சைக் கொடி. இப்படி பல்வேறு ப்ளஸ்கள் இருந்தாலும், சென்னையில் தங்காமல் மும்பையிலிருந்து வந்துசெல்வதாலேயே தனக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்று டூ லேட்டாக யோசித்து உணர்ந்து கொண்ட ரீமா சென் சென்னைக்கே இடம்பெயர்ந்துவிட முடிவெடுத்துள்ளார்.

மின்னலே மூலம் தமிழில் அறிமுகமானவர் ரீமா, முதல் படத்தில் சற்றே அடக்கி வாசித்தார்.

அடுத்து வந்த படங்களில் தனது திறமைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். கணக்கே இல்லாமல் ரீமா சென் காட்டியகிளாமரால் கோலிவுட் தயாரிப்பாளர்கள், ரீமாவைத் தேடி ஓட ஆரம்பித்தனர்.


அலாதி ஆசைகளுடனும், பெருத்த டப்புடனுன் தன்னை அணுகிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டார்ரீமா.

அடுத்தடுத்து படங்கள் ஹிட் ஆக, தெலுங்கில் இருந்தும் ஆட்கள் தேடி வர ஆரம்பித்தனர். தமிழைவிட இரண்டுமடங்கு சம்பளம் தந்ததால் தெலுங்கு பக்கமாக ஒதுங்க ஆரம்பித்தார். தெலுங்கில் மார்கெட் தளர்ந்ததும் தமிழுக்குவந்தார்.

ஆனால், தெலுங்கு சம்பளத்தை தமிழிலும் கேட்டார். அத்தோடு ஏகப்பட்ட செலவுகளையும் தயாரிப்பாளர்கள்தலை மேல் சுமத்தினார்.

மும்பையிலிருந்து வந்து போக விமான டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்குரிய செலவுகள்,ஷாப்பிங் போக ஆகும் செலவு, ஏசி லேன்சர் கார், ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் என ரீமா அடுக்கிக் கொண்டேபோக, அவரை புக் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் அழுது கொண்டே திரும்பிப் போகும் நிலை ஏற்பட்டது.


இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தும், எதையும் தாங்கும் இரும்பு உள்ளம் கொண்ட சில தயாரிப்பாளர்களும்இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புண்ணியத்தால் வல்லவன், இவன் யாரோ உள்பட அவ்வப்போது சிலபடங்களில் நடித்து வருகிறார் ரீமா சென்.

வல்லவன் படத்தில் கூட சிம்புவை அணுகி ரீமா கேட்டதால் வாய்ப்பு கிடைத்ததாம். அதில் ரீமா ஹீரோயின்அல்ல. கிளாமர் பிளஸ் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.

இவன் யாரோ இழுத்துக் கொண்டே போவதால், வல்லவனை முடித்து விட்டு என்ன செய்யப் போகிறோம் என்றவருத்தம் ரீமாவுக்கு இப்போதே வந்துவிட்டது போலும்.

இதனால் சூட்டிங் முடிந்து திரும்பியதும் தன்னுடன் நடித்த ஹீரோக்கள், மற்றும் முன்னணி டைரக்டர்கள்,தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறார். ஆனால், பெரும் முயற்சிக்குப் பின் ஒரே ஒருவாய்ப்பு தான் கிடைத்தது.

புதியவர் சசிகாந்த் என்ற புதுமுக கதாநா-யகனுடன் 1-4-3 என்ற படம் மட்டுமே ரீமாவுக்கு சிக்கியது. முன்னணி நிறுவனங்கள்,இயக்குனர்கள் யாரும் இவருக்கு வாய்ப்பு தர முன் வரவில்லை.


இதையடுத்து பிஆர்ஓக்கள் சிலரைப் பிடித்து வாய்ப்பு வாங்கித் தருமாறு கமிஷன் அடிப்படையில் ரீமா பேச,உங்களிடம் எல்லாம் இருந்தாலும் நீங்கள் அதிக செலவு வைப்பதால் தான் தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லைஎன நெளிந்தவாரே உண்மையைச் சொன்னார்களாம்.

மேலும் ரீமாவுடன் நடித்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட நடிகரும், நீ ஒவ்வொரு தடவையும்மும்பையிலிருந்து வந்து போவதால் ஏற்படும் செலவுகளை தாங்க முடியாத காரணத்தால்தான் தயாரிப்பாளர்கள்உன்னிடமிருந்து ரொம்ப தூரம் தள்ளியிருக்கிறார்கள். இதனால் தான் நான் கூட உனக்கு ரெக்கமெண்ட் செய்யமுடியவில்லை என்று விசனப்பட்டாாரம்.

இதையடுத்து ரீமா உடனே சென்னைக்கு ஜாகையை மாற்ற முடிவு செய்துள்ளார்.

சட்டு புட்டென்று தனது முடிவை அமல்படுத்த சூப்பராக ஒரு வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு நல்ல பங்களா தேடும் வேலையில் சில பிஆர்ஓக்களே களமிறங்கியிருக்கிறார்கள். ஆவணியில் பால்காய்ச்சி, தமிழ் சினிமாவில் மீண்டும் ஆட்டம் காட்ட தயாராகி வருகிறார் ரீமா.

Read more about: reema moves to chennai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil