»   »  ஒத்தைக்கு வர மறுத்த ரீமா

ஒத்தைக்கு வர மறுத்த ரீமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒத்தப் பாட்டுக்கு ஆட கோடி கொடுத்தாலும் ஸாரி என்று கூறுகிறார் ரீமா சென்.

வாரிசு நடிகர்கள் வசூலை அள்ளி வரும் இந்தக் காலத்தில் ரொம்ப காலமாக தேறாமன்னனாக இருந்து வருகிறார் சத்யராஜின் மகன் சிபி. இதையடுத்து புள்ளையைக்கரையேத்த அப்பா சத்யராஜே தயாரிப்பில் குதித்து விட்டார்.

சிபியை ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நிலாவையும் போட்டு லீ என்றபடத்தைத் தயாரிக்கிறார் சத்யராஜ். கொக்கி பட இயக்குனர் பிரபு சாலமன்தான்இப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகளை முடித்து விட்டார்கள். குறிப்பாக நிலாசம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் சுட்டு முடிக்கப்பட்டு விட்டது. இந் நிலையில்படத்தில் பச்சக் பச்சக்கான ஒரு குத்துப் பாட்டை சேர்க்கலாமே என்று சத்யராஜ்ஆலோசனை சொல்ல பிரபுவும் டபுள் ஓ.கே. சொல்லியுள்ளார்.

யாரை குத்த விடலாம் என எல்லோரும் குந்த வைத்து யோசித்தபோது ஒரு சேர ரீமாசென்னின் முகம் நினைவுக்கு வந்ததாம். சட்டுப் புட்டென்று செல்லை எடுத்து ரீமாவைஅழைத்துள்ளனர்.

லைனில் வந்த ரீமாவிடம், படத்தைப பற்றி சொன்ன பிரபு சாலமன், படு ரிச்சாக ஒருகுத்துப் பாட்டை கொத்தவுள்ளோம். நீங்கதான் மனசு வச்சு கலக்கித் தரனும் என்றுசொல்ல, வெரி வெரி ஸாரி என்று ஆரம்பித்துள்ளார் ரீமா.

திமிரு, வல்லவன் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளேன். அடுத்துரெண்டு படம் வெளியாகப் போகிறது. இதிலும் நான் அருமையாக நடித்துள்ளேன்.இப்படி ஹீரோயினாக மேலே வந்து கொடி நாட்ட ஆரம்பித்திருக்கும் நான் குத்துப்பாட்டுக்கு ஆடுவது சரியாக இருக்காது.

இனிமேல் எனது பாதை ஹீரோயினாகத்தான் போகும். குத்துப் பாட்டுக்காக கோடிரூபாய் கொடுத்தாலும் ஆட மாட்டேன், தப்பா நினைச்சுக்காதீங்கஜி என்று கூறிநாசூக்காக மறுத்து விட்டாராம்.

என்னடா இது சிபிக்கு வந்த சோதனை என்று ரோதனையாகிப் போன லீ வட்டாரம்,அடுத்து யாரைப் போடலாம் என யோசித்தபோது தியாவைக் கூப்பிட்டு தீயாக ஒருஆட்டத்தை சுட்டால் என்ன என்ற ஐடியா வந்ததாம்.

இதனால் தியாவை இப்போது அணுகியுள்ளனர். அவர் கல்யாணம் கட்டிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளதாலும், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாலும்அவரும் கிடைப்பாரா என்பது சந்தேகமாக உள்ளதாம்.

இருந்தாலும் பெரிய டப்பைக் கொடுத்தாவது (கொட்டியாவது) அவரைப் பிடித்துப்போட பிரம்மப் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார்களாம்.

முயற்சி திருவினையாக்கும், குத்துப் பாட்டு கிடைத்தாலும் கிடைக்கும்..

Read more about: reema avoids single numbers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil