»   »  கிளாமர் நண்டு!

கிளாமர் நண்டு!

Subscribe to Oneindia Tamil

ரெண்டு பட நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா, சரியான கிளாமர் நண்டு போல. படத்தில் அம்புட்டுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

சுந்தர்.சி இயக்கத்தில், குஷ்பு தயாரிப்பில் உருவாகும் படம்தான் ரெண்டு. மாதவன், ரீமா சென் ஜோடியில்உருவாகும் இப்படத்தில் புதிதாக அனுஷ்காவையும் இப்போது சேர்த்துள்ளனர்.

ரீமா சென்னையும், அனுஷ்காவையும் வைத்து கிளாமர் போர்ஷனை பக்காவாக உருவாக்கியுள்ளாராம் சுந்தர்.சி.சமீபத்தில் அனுஷ்காவை வைத்து அட்டகாசமான பாடல் ஒன்றை சுட்டுள்ளார் சு.சி.

இதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் அட்டகாசமான அருவி செட்டப்பைப் போட்டு கலக்கியுள்ளனர். அச்சு அசல்அருவியைப் போலவே காணப்பட்ட இந்த செயற்கை அருவியை உருவாக்க சில லட்சங்கை வாரிஇறைத்துள்ளார்களாம்.

இந்த செயற்கை அருவியின் உயரம் 20 அடியாகும். 10 லாரி தண்ணீரை வைத்து அருவியை செட் செய்துள்ளனர்.பார்ப்பதற்கு நிஜமான அருவியைப் போலவே தெரிந்ததால், பாடலுக்கு ஆட வந்த மாதவன், அசந்து போய்நின்று விட்டாராம்.இந்த அருவியில் நனைந்தபடியே அனுஷ்காவும், மாதவனும் ஆட்டம் போட்டுள்ளனர்.

நீரில் நனைந்தபடி அனுஷ்கா ஆடிய ஆட்டம், படு இயற்கையாக இருந்ததாம். அம்மணிக்கு எதுவுமே செயற்கைஇல்லை என்று செட்டில் எல்லோரும் புல்லரித்துப் பேசியதைக் காண முடிந்தது.

இந்தப் பாட்டு மட்டுமல்லாது அனுஷ்கா வரும் காட்சிகளில் எல்லாமே கிளாமர் படு காரமாக தூள் கிளப்புமாம்.கிளாமர் நண்டாக மாறி ரெண்டு படத்தில் அனுஷ்கா செய்திருக்கும் கவர்ச்சி புரட்சிக்குப் போட்டியாக ரீமாசென்னும், வாம்மா கண்ணு என்று அனுஷ்காவின் கிளாமருக்கு சரியான சவால் விட்டுள்ளாராம்.

இவர்கள் இரண்டு பேரும் போட்டிருக்கும் கவர்ச்சி களியாட்டத்தைப் பார்த்தால் படத்தை சென்சார்செய்யும்போது ஆளுக்கு ரெண்டு கத்திரிக்கோலோடு சென்சார் உறுப்பினர்கள் உட்கார வேண்டும் போல!

Please Wait while comments are loading...