»   »  ரீமாவுடன் இதுவா?..விஷால்

ரீமாவுடன் இதுவா?..விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரீமா சென்னுக்கும், தனக்கும் இடையே எந்த மேட்டரும் இல்லையாம். சொல்லிவிட்டார் கருத்த ராசா விஷால்.

செல்லமே மூலம் தமிழ் ரசிகர்களை சந்தித்த விஷால், தொடர்ந்து சண்டைக்கோழிமூலம் தனக்கென தனி வட்டத்தை உருவாக்கி விட்டார். இந்த கருத்த ராசாவுக்கு பெண்ரசிகைகள் ஏராளமாம்.

சமீபத்தில் கூட ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகை ஒருவர் ஆட்டோகிராப் கேட்கிறசாக்கில் விஷாலின் கருத்த கன்னத்தில் பச்சக் ஒன்றை வைத்து செவக்க வைத்துவிட்டாராம்.

ஆனால் ராசாவின் மனசுக்குப் பிடிச்ச செல்லம் ரீமா சென்தான் என்கிறார்கள். ரீமாவும்,விஷாலும், செல்லமே படத்தில் நடித்தபோதே நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.இந்த நட்பு இப்போது ஒருவரையொருவர் அப்பிக் கொள்ளும் அளவுக்குநெருக்கமான காதலாக மாறி விட்டதாக கோலிவுட்டில் சூடாக கிசுகிசுக்கிறார்கள்.

ஆனால் இதை விஷால் மறுக்கிறார்.

ரீமாவுக்கும், எனக்கும் இடையே நல்ல நட்புதான் இருக்கிறது. வேறு எதுவும் இல்லை.ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து வரும் செய்திகளில் உண்மை இல்லை.

செல்லமே படத்திற்குப் பிறகு திமிரு படத்திலும் என்னுடன் ரீமா நடிப்பதால் இப்படிஒரு வதந்தியைக் கிளப்பி விட்டு விட்டார்கள். திமிரு கதைக்கு ரீமா பொருத்தமாகஇருப்பார் என்பதால்தான் அவரை ஹீரோயினாக போட்டோம். மற்றபடி எனதுபரிந்துரையின்படி ரீமாவை புக் பண்ணவில்லை. இதில் வேறு எதுவும்சொல்வதற்கில்லை என்று எஸ்கேப் ஆகிறார் விஷால்.

இரண்டு பேருக்கும் இடையே என்ன மேட்டர் இருக்கிறதோ, அது விஷாலுக்கேவெளிச்சம்.

திமிரு படத்தைத் தொடர்ந்து சிவப்பதிகாரம், தாமிரபரணி என இரண்டு புதியபடங்களில் நடிக்கிறார் விஷால்.

சிவப்பதிகாரத்தில் மம்தா அவருக்கு ஜோடி போடுகிறார். தாமிரபரணியில், கேரளவரவான முக்தா மல்லுக்கட்ட இருக்கிறார்.

கலக்குய்யா, மச்ச ராசா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil