»   »  ரீமாவின் ரெண்டே ரெண்டு!

ரீமாவின் ரெண்டே ரெண்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரீமா சென்னிடம் தயாரிப்பாளர்கள் போனால் ரெண்டே ரெண்டு கண்டிஷன்தான்போடுகிறார். அதை செய்து விட்டால் அப்புறம், அவரிடமிருந்து சூப்பர் ஒத்துழைப்புகிடைக்குமாம்.

பிசியான நடிகையாகியிருக்க வேண்டிய ரீமா சென், காட்டிய பந்தா மற்றும்சென்னையில் தங்காமல் கொல்கத்தாவில் இருந்து வந்து நடித்துப் போனது ஆகியகாரணங்களால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது.

இப்போது காலம் போன காலத்தில் சென்னைக்கே குடி பெயரத் திட்டமிட்டுள்ளார் ரீமாசென். அத்தோடு தனது பல பந்தாக்களையும் தூக்கிப் போட்டு விட்டாராம்.

இப்போது ரீமாவை புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்களுக்கு அவர் ரெண்டேரெண்டு கண்டிஷன்தான் போடுகிறார்.

அதாவது தனது சம்பளத்தை மொத்தமாக ஒரே பேமண்ட்டாக கொடுத்து விடவேண்டும், நான் சொல்லும் ஹோட்டலில் ரூம் போட வேண்டும் ஆகியவைதான்அக்கா போடும் கண்டிஷன்கள்.

இதுதவிர கூடுதல் கிளாமராக நடிக்க தூக்கலான சம்பளத்தைத் தூக்கித் தர வேண்டும்என்றும் அன்பாக கேட்கிறார் ரீமா சென்.

இந்த நிபந்தனைகளை ஒத்துக் கொண்டு காந்தித் தாத்தாவை கண்ணில் காட்டும்தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம் ரீமா.

சென்னையில் தான் நிரந்தரமாக தங்குவதற்காக சூப்பரான ஒரு வீட்டைப் பார்த்துவருகிறார் ரீமா. வீடு குதிர்ந்தவுடன் நிறையத் தமிழ்ப் படங்களில் என்னைக் கண்டுரசிக்கலாம் என கூறுகிறார் ரீமா.

சிம்புவுடன் மோதல் என்ன ஆச்சு என்று கேட்டால், அப்படியா, நாங்க சண்டைபோட்டோமோ, எப்போ என்று ரொம்ப அப்பாவியாக திருப்பிக் கேட்கிறார்.

சிம்புவுடன் நேருக்கு நேர் சந்தித்து பிரச்சினையை தீர்த்துக் கொண்டுவிட்டேன் என்றுசொல்லும் அவர் இப்போது மீண்டும் வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுநடித்துக் கொடுத்து வருகிறார்.

சரி, ரீமாவின் சம்பளம் என்ன தெரியுமோ? ஜஸ்ட் 25 லட்சம்தான். இது சாதாரணமாகநடித்துக் கொடுப்பதற்கு, பலான பலான கிளாமர் காட்டி கலக்க வேண்டும் என்றால்அதில் பாதியை கருப்பாக, தனியாக தந்து விட வேண்டுமாம்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..

ஜிக்காங்...ஜிக்காங்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil