Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைக்கு அடிமையான ரெஜினா!?
Recommended Video
சென்னை : நடிகராக தெலுங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் நானி 'அவ்' எனும் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் ரெஜிகா கசாண்ட்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறாராம் நடிகை ரெஜினா.
அவ் போஸ்டர்
'அவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரெஜினாவின் பிறந்தநாள் அன்று 'அவ்' பட போஸ்டரை நானி வெளியிட்டார். தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
போதைக்கு அடிமையான பெண்
காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் ரெஜினா ஒரு ஹாட்டான கேரக்டரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.
உடல் முழுவதும் பச்சை குத்திய ரெஜினா
'அவ்' பட போஸ்டரில் உடல் முழுக்க பச்சை குத்தி வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ரெஜினா. தற்போது ரெஜினா கசாண்ட்ரா, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 'மிஸ்டர் சந்தரமௌலி' படத்தில் நடித்துவருகிறார்.
நெகடிவ் வேடம்
"இந்தப் படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக, ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது எனது பெயர் சொல்லும் வேடமாக அமையும். அதோடு, இந்த வேடம் நெகடிவ் கலந்த வேடமாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார் ரெஜினா.