பர்மிஷன் வாங்கி எடுக்கறாங்களாம்... கொரிய ஆக்ஷன் காமெடி ரீமேக்கில் ரெஜினா, நிவேதா தாமஸ்
சென்னை: கொரிய படத்தின் ரீமேக்கில் ரெஜினா காஸன்ட்ராவும் நிவேதா தாமஸும் நடிக்க உள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கிய, கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ரெஜினா. இந்த படம் ஹிட்டானது.
தொடர்ந்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் சிலுக்குவார்பட்டி சிங்கம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அஸ்ட்ராலஜர்
இவர் இப்போது, திருடன் போலீஸ் பட இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஸ்ட்ராலஜராக அவர் வருகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக அக்ஷரா கவுடா நடிக்கிறார்.

கொரிய ரீமேக்
இந்நிலையில் அவர் கொரிய படத்தின் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான கொரிய ஆக்ஷன் காமெடி படம், மிட்நைட் ரன்னர்ஸ்.

சமந்தா
ஜேசன் கிம் இயக்கிய இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, சுனிதா ஆகியோர் வாங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த ஓ பேபி என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்தவர்கள்.

நிவேதா தாமஸ்
இந்தப் படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இதில் ரெஜினாவுடன் நிவேதா தாமஸும் நடிக்கிறார். இவர் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கும் தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தவர்.


Click it and Unblock the Notifications











