கிகி சாலன்ச்... ஓடும் காரில் இருந்து குதித்து டான்ஸ் ஆடிய ரெஜினா!
சென்னை: சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாக உள்ள கிகி சாலன்ச்சிற்காக, ஓடும் காரில் இருந்து குதித்து நடனம் ஆடி அசத்தியுள்ளார் நடிகை ரெஜினா.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்திருந்தவர் நடிகை ரெஜினா. அதனைத் தொடர்ந்து தமிழில் சொல்லிக் கொள்ளும் பட வாய்ப்புகள் அமையாததால், தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு கவர்ச்சியை அள்ளி வீசிய ரெஜினாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.
அதன் தொடர்ச்சியாக தமிழிலும் கவர்ச்சி காட்டத் தொடங்கினார். சமீபத்தில் கௌதம் கார்த்தியுடன் அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமௌலி படம் ரிலீசானது. இப்படத்தில் பிகினி உடையில் அவர் கலக்கியிருந்தார்.

ரெஜினாவின் நடனம்:
இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெஜினா. அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி, ஒரு பாப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சிறிது நேரம் ஓடும் காருக்கு இணையாக சாலையில் நடனம் ஆடும் அவர், பின்னர் அதே வேகத்தில் ஓடும் காரில் ஏறிக் கொள்கிறார்.

ஷூட்டிங் பிரேக்:
இந்த வீடியோ படப்பிடிப்பின் இடைவேளையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாவாடை தாவணி கட்டி, கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா தோற்றமளிக்கிறார். கூடவே இந்தப் பதிவில் அவர், ‘கிகி சாலஞ்ச் முடித்து விட்டேன். உங்களுடைய டியூனுக்கு தென்னிந்தியப் பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும்' என அவர் தெரிவித்துள்ளார்.

கிகி சாலஞ்ச்:
பிரபல பாப் பாடகர் டிரேக்ஸ்-ன் ஸ்கார்பியன் எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்'. கடந்த மாதம் இந்த ஆல்பம் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘இன் மை பீலிங்ஸ்' சாலஞ்ச் அல்லது கிகி சாலஞ்ச் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் சவாலாக வைரலானது.

இந்தியாவிலும்:
இந்த சவால் இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். பின் அந்த வீடியோவை ‘இன் மை பீலிங்ஸ் ஹேஷ்டேக்குடன் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ரோட்டோரமாக ஆட்டம்:
இப்போது புரிகிறதா ரெஜினா எதற்காக இவ்வாறு ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடி இருக்கிறார் என்று. இவர் மட்டுமல்ல பாலிவுட் நடிகை அடா சர்மா உட்பட பலரும் இந்த சவாலை ஏற்று ரோட்டோரமாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











