கூடுதல் சம்பளத்திற்காக அட்ஜஸ்ட் செய்த ரெஜினா
சென்னை: கூடுதல் சம்பளத்திற்காக ரெஜினா கசான்ட்ரா அட்ஜஸ்ட் செய்துள்ளாராம்.
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரெஜினா. தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
அவர் கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்த மிஸ்டர் சந்திரமௌலி படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை.

ரெஜினா
செக்கச் சிவந்த வானம் படத்தை அடுத்து அரவிந்த்சாமி அச்சமின்றி படம் புகழ் ராஜாபாண்டியின் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக அதிலும் குறிப்பாக ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரெஜினா. இது தவிர மேலும் ஒரு த்ரில்லர் படத்திலும் நடிக்க உள்ளார் ரெஜினா.

சம்பளம்
வளர்ந்து வரும் நேரத்தில் ரெஜினா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். சீனியர் ஹீரோயின்களே குழந்தைக்கு அம்மாவாக நடிக்கச் சொன்னால் ஹலோ, எனக்கு இன்னும் அந்த வயசு வரவில்லை என்கிறார்கள். இந்நிலையில் ரெஜினா துணிந்து அந்த முடிவை எடுத்ததற்கு பின்னால் சம்பள விஷயம் உள்ளதாம்.

காசு
அம்மாவாக நடிக்க கூடுதல் சம்பளம் தருகிறோம் என்றார்களாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ள ரெஜினாவும் ஓகே சொல்லிவிட்டாராம். எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து அம்மாவாக நடிக்கும் இந்த படமாவது அவருக்கு ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நந்திதா ஸ்வேதா
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஒன்றாக நடித்த நந்திதா ஸ்வேதாவும், ரெஜினாவும் தற்போது த்ரில்லர் படம் ஒன்றில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள். நிஜார் ஷபி இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் நிஜார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











