Regina Cassandra: ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்.. நான் ஒரு சீரியல் டேட்டர்.. விடாமுயற்சி நடிகை ஓபன்!

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இன்னொரு ஹீரோயினாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார்.

33 வயதாகும் ரெஜினா கசாண்ட்ரா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் வலம் வந்த நிலையில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

regina cassandra vidamuyarchi heroine

சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் தான் அதிகப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா: தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரெஜினா கசாண்ட்ரா அதன் பின்னர் துணை நடிகையாக சமீப காலமாக நடித்து வருகிறார். விஷாலின் சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை, தலைவி, காஞ்சுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் சோனம் கபூருடன் இணைந்து இவர் நடித்த ஏக் லட்கி கோ தேக்கா தோ ஐசா லகா திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி உருவாகி இருந்த நிலையில் பல சர்ச்சைகளை கிளப்பியது.

ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்: சென்னையை சேர்ந்த ரெஜினா கசாண்ட்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஏகப்பட்ட சவால்களை சந்தித்து தனது கடும் முயற்சியால் போராடி நடிகையாக மாறியுள்ளார். இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்காமல் வந்த ரெஜினா கசாண்ட்ரா தான் அதிகப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் தான் ஒரு சீரியல் டேட்டர் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

regina cassandra vidamuyarchi heroine

விடாமுயற்சி: மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வர சாத்தியமில்லை என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வரும் என்றும் கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் வில்லியாக இவர் நடித்து இருக்கிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் தெலுங்கில் இவர் நடித்த உத்சவம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் தொடர்பான பேட்டியின் போது ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக தான் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதை கூறியுள்ளார்.

படு போல்டான நடிப்பு: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலேயே படு போல்டாக இவர் நடித்திருப்பார். அதே போல இந்தியில் ஓரினச்சேர்க்கையாளராகவும் நடித்து அதிர விட்டார். இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கிளாமர் போட்டோக்களை அவ்வப்போது அடுக்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா.

regina cassandra vidamuyarchi heroine

பான் இந்தியா நடிகை: சென்னையில் பிறந்து வளர்ந்து உமன்'ஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற ரெஜினா கசாண்ட்ரா தமிழில் விடாமுயற்சி, தெலுங்கில் உத்சவம் மற்றும் இந்தியில் செக்‌ஷன் 108, ஜாட், ஃபிளாஷ்பேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. ராக்கெட் பாய்ஸ், ஃபிங்கர் டிப், அன்யாஸ் டுட்டோரியல், ஃபர்ஸி, ஜான்பாஸ் இந்துஸ்தான் கே உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். 33 வயதான இவர் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மேலும், தனது காதலரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X