என்னாது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா?

By Siva

சென்னை: நடிகை ரெஜினா கசான்ட்ராவுக்கு கடந்த 13ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்டநாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னை பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கு திரையுலகில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Regina Cassangra got engaged?

அவர் ஏக் லட்கி கோ தேக்கா தோ ஏசா லகா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதுவும் அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ரெஜினா.

28 வயதாகும் ரெஜினாவுக்கு கடந்த 13ம் தேதி ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் ரெஜினா என்று கூறப்படுகிறது.

ரெஜினாவின் கெரியர் எதிர்பார்த்த அளவுக்கு செல்லாததால் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம், திருமணம் பற்றி ரெஜினா கசான்ட்ரா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ரெஜினாவும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. நாங்கள் காதலர்கள் எல்லாம் இல்லை, நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பேச்சை யாரும் நம்பத் தயாராக இல்லை.

முன்னதாக ரெஜினாவுக்கும் நடிகர் சந்தீப் கிஷனுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. ரெஜினா தன் வாழ்வில் காதல் வந்து போனதை முன்பு அளித்த பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முன்னாள் காதலர்களுடன் தற்போதும் நட்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஒரேயொருவரை மட்டும் அவசரத்தில் கழற்றிவிட்டுவிட்டோமோ என்று ஃபீல் பண்ணியதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நடிகை ஒருவர் தனது முன்னாள் காதலர்கள் பற்றி இப்படி வெளிப்படையாக பேட்டி அளித்தது அப்போது பலரையும் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரெஜினா செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த பார்ட்டி படமும் ரிலீஸாவதில் தாமதம் ஆகியுள்ளது.

இந்நிலையில் அவர் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் கசடதபற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X