ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படம்... ஜோதிடம் சொல்ல வருகிறார் ரெஜினா
சென்னை: கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் அஸ்ட்ராலஜராக நடிக்கிறார் நடிகை ரெஜினா காஸண்ட்ரா
பாண்டிராஜ் இயக்கிய, கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ரெஜினா. இந்த படம் ஹிட்டானது.
தொடர்ந்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் சிலுக்குவார்பட்டி சிங்கம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அக்ஷரா கவுடா
இவர் இப்போது, திருடன் போலீஸ் படத்தை இயக்கிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஸ்ட்ராலஜராக அவர் வருகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக அக்ஷரா கவுடா நடிக்கிறார்.

ஹீரோயினுக்கு
இதுபற்றி ரெஜினா கூறும்போது, இயக்குனர் கார்த்திக் ராஜூ இதன் கதையை சொல்லும் என்னோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான படமாக இருக்கும்.

ஜனவரியில் ஷூட்டிங்
படத்தில் இன்னொரு ஹீரோயின் இருந்தாலும் எனது ரோலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ' என்றார். ஜனவரி 10 ஆம் தேதி இதன் ஷூட்டிங் சென்னையில் தொடங்குகிறது.

காமெடி, சென்டிமென்ட்
படத்தில் ஒவ்வொரு நாளும் பெண்கள் படும் கஷ்டம், காமெடி, சென்டிமென்ட் ஆகியவையும் படத்தில் இருக்கும். இதன் திரைக்கதை புதுமையாக இருக்கும் என்ற படக்குழுத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











