ரெஜினாவுக்குப் பதிலாக ரம்யா நம்பீசன்!
பெங்களூர் : நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் 'குருஷேத்திரா' எனும் புராணப் படம் ஒன்று கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகிறது.
இந்தப் படத்தில் துரியோதனனின் மனைவி கதாபாத்திரத்தை ரெஜினா நடிக்கவிருந்தார். தற்போது அவருக்குப் பதிலாக ரம்யா நம்பீசன் நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது.

இது கன்னடத்தில் ரம்யா நம்பீசனின் இரண்டாவது படமாகும். ஏற்கனவே 'ஸ்டைல் கிங்' என்னும் படத்தில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரம்யா நம்பீசன் பாடகியாகவும் பல படங்களில் பாடியிருக்கிறார்.
கன்னட சினிமாவை விட தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் என்பதால் தன்னைப் பிரபலப்படுத்திய கன்னட சினிமாவை ரெஜினா மறந்துவிட்டதாக கன்னட ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், இப்போது நடிக்கவிருந்த படமும் ரம்யா நம்பீசனுக்குப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











