»   »  அசுர அழகி ரெஜீனா!

அசுர அழகி ரெஜீனா!

Subscribe to Oneindia Tamil

அழகிய அசுரா என்று பெயர் மாறி திரைக்கு வந்திருக்கும் படத்தின் அழகிய நாயகி,ரெஜீனா படு ரம்யமாக இருக்கிறார்.

நாகுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் அழகிய அசுரா. முதலில்இப்படத்திற்கு இடியட் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் கேளிக்கை வரியைகவ்வும் நோக்கத்தில் அழகிய அசுரா என்று தமிழ்ப்படுத்தி விட்டனர்.

இதில் யோகி என்பவர் ஹீரோவாக திறமை காட்டியிருக்கிறார். அவருக்கு ஜோடிபோட்டிருப்பவர் ரெஜீனா. படு க்யூட் குதிரையாக இருக்கிறார் ரெஜீனா.

நீள மூக்கு, கோல விழி, ஜால நடை என படுத்துகிறார் கேரளத்து தக்காளியானரெஜீனா. தள தள தக்காளி போல கொழுக் மொழுக்கென சுண்டி இழுக்கிறார்.

யோகியோ கருப்பு பூனை போல இருக்கிறார். பொத்தாம் பொதுவாகத்தான்ரெஜீனாவுடன் டூயட் பாடி நடித்திருப்பார் போல யோகி. அந்த அளவுக்கு ரெஜீனாவின்அத்தனை பக்கங்களும் படு அட்டகாசம்.

இருவரும் படத்தில் காதலர்கள். அவர்களைப் பிடிக்காத வித்தியாச வில்லனாகவருகிறார் டிவி சீ>யல்களில் நடித்தவரான கிருஷ்ணா. இவரிடமிருந்து தப்பி கைகோர்க்க துடிக்கிறார்கள் யோகியும், ரெஜீனாவும். அது எப்படி என்பதுதான் கதை.

கிளாமராக நடிக்க படு துணிச்சலுடன் பச்சைக் கொடி காட்டியுள்ள தொடர்ந்துகிளாமருக்கு ரெடியாக இருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரப்பி வருகிறார்.

அதே நேரத்தில் குடும்பக் குத்துவிளக்காக வந்து போகவும் ஏற்ற வெர்சடைல் முகம்ரெஜீனாவுக்கு. இரண்டிலும் அசத்தலாக தெரிகிறார்.

ரெஜீனாவுக்கு இது முதல் படமாக இருந்தாலும் ஷூட்டிங்கின்போது பின்னி எடுத்துவிட்டாராம். கிளாமர் டால் ஆக மட்டும் இல்லாமல், நடிப்பு மால் ஆகவும் நான்இருப்பேன் என்று நெஞ்சைத் தட்டி தன்னம்பிக்கையாக சொல்கிறார் ரெஜீ.

பேசாமல், அழகிய அசுரா என்று பெயர் வைத்ததற்குப் பதில், அசுர அழகி என்றுரெஜீனாவை வைத்து டைட்டிலைப் போட்டிருக்கலாம்.

தப்பு பண்ணிட்டா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil