என்னது எம்.எல்.ஏவுடன் திருமணமா?.. நடிகை ரேகா நாயர் கொடுத்த நச் விளக்கம்

சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் எம்.எல்.ஏவை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இப்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.

சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். லீட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்தார்.

Rekha Nair Explains About her Marriage Controversy

இரவின் நிழல்: இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்தக்கொண்டிருந்த ரேகா நாயருக்கு இரவின் நிழல் ஒளி கொடுத்தது. ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் சரியாக போகாவிட்டாலும் ரேகா நாயருக்கு பெயர் கிடைத்தது. குறிப்பாக அப்படத்தில் அவர் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் விவாதப்பொருள் ஆனது. ஆனால் அந்தக் காட்சி ஆபாசமானதாக இருக்கவில்லை.

பற்றவைத்த பயில்வான்: சூழல் இப்படி இருக்க எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்தார். இந்த விவகாரம் முற்ற; அவர் நடைபயிற்சி செல்லும்போது ரேகா நாயர் பயில்வானை மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. ரேகா நாயர் கேட்டதற்கு பயில்வானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

போட்டுடைக்கும் ரேகா: மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கம் உடைய ரேகா நாயர் ஒரு பேட்டியில்கூட பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் அவரிடம் அப்படி பேசியதற்கு பல பெரிய நடிகர்களும், நடிகைகளுமேகூட என்னை பாராட்டினார்கள் என பேசியிருந்தார். இந்தச் சூழலில் அவர் எம்.எல்.ஏ ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

ரேகா நாயரின் விளக்கம்: இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் ரேகா நாயர், "எம்.எல்.ஏவின் அப்பாவைத்தான் எனக்கு தெரியும். எனக்கு அவர் நல்ல பழக்கம். சில மாரத்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமோது அவருடன் பேசியிருக்கிறேன் அவ்வளவுதான். நாங்கள் அனைவருமே ஒரே ஏரியாவை சேர்ந்தவர்கள்தான். அப்படித்தான் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த எம்.எல்.ஏவும் அந்தவகையில்தான் எனக்கு பழக்கமானார். ஆனால் எனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். இதற்கான பதிலை நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X