நடிகைக்கு சொந்தமான கார் ஏற்படுத்திய விபத்து.. ஒருவர் பரிதாப உயிரிழப்பு
சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவருக்கு சொந்தமான கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். லீட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்தார்.

இரவின் நிழல்: இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த ரேகா நாயருக்கு இரவின் நிழல் ஒளி கொடுத்தது. ஒரே ஷாட்டில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் சரியாக போகாவிட்டாலும் ரேகா நாயருக்கு பெயர் கிடைத்தது. குறிப்பாக அப்படத்தில் அவர் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் விவாதப்பொருள் ஆனது. ஆனால் அந்தக் காட்சி ஆபாசமானதாக இருக்கவில்லை. அந்த சீனில் நடித்ததற்காக பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
பற்றவைத்த பயில்வான்: சூழல் இப்படி இருக்க எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்தார். இந்த விவகாரம் முற்ற; அவர் நடைபயிற்சி செல்லும்போது ரேகா நாயர் பயில்வானை மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. ரேகா நாயர் கேட்டதற்கு பயில்வானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
போட்டுடைக்கும் ரேகா: மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கம் உடைய ரேகா நாயர் ஒரு பேட்டியில்கூட பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் அவரிடம் அப்படி பேசியதற்கு பல பெரிய நடிகர்களும், நடிகைகளுமேகூட என்னை பாராட்டினார்கள் என பேசியிருந்தார். அதேபோல் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து யாராவது கேட்டால் எந்தவித தயக்கமோ, பயமோ இல்லாமல் ஓபனாக பேசுவேன். அந்தப் பேச்சே அவர்களை என்னிடமிருந்து விலக செய்துவிடும் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஏற்படுத்திய விபத்து: இந்நிலையில் ரேகா நாயருக்கு சொந்தமான கார் ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டதாகவும்; அந்த விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சியில் இருந்த கார் ரேகாவுக்கு சொந்தமானது என்று காவல் துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்த காவல் துறையினர், காரையும் பறிமுதல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











