»   »  ரேணுகா மேனன் டும் டும்

ரேணுகா மேனன் டும் டும்

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் தனது ராசி பலிக்காமல் போனதால் கல்யாணம் செய்து கொள்ளமுடிவெடுத்து விட்டார் ரேணுகா மேனன்.

அவருக்கும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றும் கேரளத்தைச்சேர்ந்த சுராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாம்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு தமிழ் சினிமாவுக்கு வந்த கேரள வரவுகளில் ஒருவர்ரேணுகா மேனன். ஆனால் மற்றவர்களைப் போல ரேணுகாவுக்கு பெரிய வரவேற்புகிடைக்கவில்லை. அவரது முதல் இரு படங்களும் ஊத்திக் கொண்டன.

தாஸ், பிப்ரவரி 14 ஆகிய இரு படங்களும் சரியாக போகாததால், அப்செட் ஆனதுரேணுகா மட்டுமல்ல, அவரது ஃபார்ச்சூனும் தான். கலாபக் காதலன் பெரிதாகஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் ரேணுகாவை விட அக்ஷயா தான் அதிகம்பேசப்பட்டார்.


இதனால் படங்களுக்கு பிரேக் விட்டு விட்டு அமெரிக்காவுக்குப் படிக்கப் போய்விட்டார் ரேணுகா. படிக்கப் போன பின்னர் வந்த பெட்ரோல் (தமிழ்), பதாகா(மலையாளம்) ஆகிய பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டார் ரேணுகா.

இப்போது ரேணுகாவுக்கு கல்யாணம் முடிவாகியுள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தான்கேரளாவில் உள்ள ரேணுகாவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளையின்பெயர் சுராஜ். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக உள்ளாராம். ரேணுகாபடிப்புக்காக அமெரிக்கா போனபோதுதான் சுராஜை சந்தித்துள்ளார்.

பார்த்ததுமே காதல் மலர்ந்து விட்டதாம். நெருங்கிப் பழகி இருவரும் ஒருவரைஒருவர் புரிந்து கொண்டு பெற்றோர் காதுகளுக்கு காதலை கொண்டு சென்றனர். இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்து தட்டையும் மாற்றி விட்டனர். நவம்பரில்கல்யாணமாம்.

கல்யாணத்திற்குப் பிறகு ஆத்துக்காரரோடு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிடுவாராம் ரேணுகா. அதன் பிறகு சினிமாவை சுத்தமாக மறந்து விடுவாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil