அம்மா ஆனார் ரேணுகா மேனன்!! அம்மா வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகளுக்கு சாபம் விட்டார் தங்கர் பச்சான். அவரது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் 2குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்ததால் கோபமடைந்து சாபம் போட்டார்.பின்னர் நவ்யா நாயர் நடிக்க, படம் சூப்பர் ஹிட் வெற்றியாக ஓடிக் கொண்டுள்ளது. இது பழைய கதை.இப்போது வளரும் நாயகி ஒருவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி துணிச்சலாக நடிக்க முன் வந்திருப்பவர்கேரளத்து வரவான ரேணுகா மேனன். பார்க்க படு பளிச் என இருக்கும் ரேணுகா மேனன் நடித்த முதல் இரு படங்களும் டப்பா படவரிசையில் சேர்ந்து விட்டன. பிப்ரவரி 14, தாஸ் ஆகிய இரு படங்களும் ஓடாததால் ராசியில்லாத நாயகி வரிசையில் சேர்ந்து விடுவார் என பேசப்பட்டது.ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கையில் சில படங்களுடன் தெம்பாகவவே வலம் வருகிறார் ந்த கேரத்து சேச்சி. கலாபக் காதலன்என்ற படத்தில் தற்போது ஆர்யாவுடன் நடித்து வருகிறார் ரேணுகா.இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ரேணுகா.எப்படி மற்ற இளம் கதாநாயகிகளுக்கு இல்லாத துணிச்சல் உங்களுக்கு என்று ரேணுகாவிடம் ஆச்சரியக் கொக்கியைப் போட்டபோது, இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை. மலையாளத்தில் இதுபோன்ற ரோல்களில் முன்னணி நடிகைகள்நடிப்பது சாதாரண விஷயம். ஒரு படத்தில் அம்மா கேரக்டரில் நடிப்பார்கள், அடுத்த படத்தில் கல்லூரி மாணவியாக வருவார்கள்.நல்ல கதையாக இருப்பதால் ரசிகர்கள் அப்படிப்பட்ட கேரக்டர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். நடிக்கும் நடிகையை அவர்கள் முக்கியமாகபார்ப்பதில்லை. கதாபாத்திரத்தைத்தான் பார்ப்பார்கள்.எனவே, மலையாள நடிகையான எனக்கு இதுபோன்ற கேரக்டரில் தமிழில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எனவேதான்கலாபக்காதலினில் ஒரு குழந்தைக்கு அம்மா பாத்திரத்தில் கலக்கலாக நடித்து வருகிறேன் என்கிறார் ரேணுகா. (தங்கர் கேட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்.)நீங்க நடிச்ச முதல் இரண்டு தமிழ் படங்களுமே ஊத்திக்கிச்சே என்று சோகமாய் கொக்கி போட்டபோது,இரண்டு படங்களுமே நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்கள்தான். ஆனால் இரண்டுமே ரசிகர்களைக் கவரவில்லை. எனக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை கரெக்ட் ஆகத்தான் செய்தேன்.ஒரு படம் ஓடுவதும், ஓடாததும் அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சேர்ந்தது. எனவே இரு படங்களின் தோல்விக்கும் நான்மட்டும் காரணம் இல்லை.அடுத்து வரும் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன் என்றார் ரேணுகா.மலையாளியாக இருந்தாலும் கூட அட்சரச் சுத்தமாக தமிழில் பேசி அசத்துகிறார் ரேணுகா. தமிழை லேசு பாசாக வாசிக்கக் கூடத்தெரியுமாம்.

By Staff

அம்மா வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகளுக்கு சாபம் விட்டார் தங்கர் பச்சான். அவரது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் 2குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்ததால் கோபமடைந்து சாபம் போட்டார்.

பின்னர் நவ்யா நாயர் நடிக்க, படம் சூப்பர் ஹிட் வெற்றியாக ஓடிக் கொண்டுள்ளது. இது பழைய கதை.

இப்போது வளரும் நாயகி ஒருவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி துணிச்சலாக நடிக்க முன் வந்திருப்பவர்கேரளத்து வரவான ரேணுகா மேனன். பார்க்க படு பளிச் என இருக்கும் ரேணுகா மேனன் நடித்த முதல் இரு படங்களும் டப்பா படவரிசையில் சேர்ந்து விட்டன.


பிப்ரவரி 14, தாஸ் ஆகிய இரு படங்களும் ஓடாததால் ராசியில்லாத நாயகி வரிசையில் சேர்ந்து விடுவார் என பேசப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கையில் சில படங்களுடன் தெம்பாகவவே வலம் வருகிறார் ந்த கேரத்து சேச்சி. கலாபக் காதலன்என்ற படத்தில் தற்போது ஆர்யாவுடன் நடித்து வருகிறார் ரேணுகா.

இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ரேணுகா.

எப்படி மற்ற இளம் கதாநாயகிகளுக்கு இல்லாத துணிச்சல் உங்களுக்கு என்று ரேணுகாவிடம் ஆச்சரியக் கொக்கியைப் போட்டபோது,


இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை. மலையாளத்தில் இதுபோன்ற ரோல்களில் முன்னணி நடிகைகள்நடிப்பது சாதாரண விஷயம். ஒரு படத்தில் அம்மா கேரக்டரில் நடிப்பார்கள், அடுத்த படத்தில் கல்லூரி மாணவியாக வருவார்கள்.

நல்ல கதையாக இருப்பதால் ரசிகர்கள் அப்படிப்பட்ட கேரக்டர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். நடிக்கும் நடிகையை அவர்கள் முக்கியமாகபார்ப்பதில்லை. கதாபாத்திரத்தைத்தான் பார்ப்பார்கள்.

எனவே, மலையாள நடிகையான எனக்கு இதுபோன்ற கேரக்டரில் தமிழில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எனவேதான்கலாபக்காதலினில் ஒரு குழந்தைக்கு அம்மா பாத்திரத்தில் கலக்கலாக நடித்து வருகிறேன் என்கிறார் ரேணுகா.


(தங்கர் கேட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்.)

நீங்க நடிச்ச முதல் இரண்டு தமிழ் படங்களுமே ஊத்திக்கிச்சே என்று சோகமாய் கொக்கி போட்டபோது,

இரண்டு படங்களுமே நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்கள்தான். ஆனால் இரண்டுமே ரசிகர்களைக் கவரவில்லை. எனக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை கரெக்ட் ஆகத்தான் செய்தேன்.

ஒரு படம் ஓடுவதும், ஓடாததும் அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சேர்ந்தது. எனவே இரு படங்களின் தோல்விக்கும் நான்மட்டும் காரணம் இல்லை.

அடுத்து வரும் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன் என்றார் ரேணுகா.

மலையாளியாக இருந்தாலும் கூட அட்சரச் சுத்தமாக தமிழில் பேசி அசத்துகிறார் ரேணுகா. தமிழை லேசு பாசாக வாசிக்கக் கூடத்தெரியுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X