சங்கீதாவுக்கு விவாகரத்தா?.. அய்யய்யோ கோலிவுட்டில் புது பிரச்னையா?.. இதுதான் காரணமா?

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த சங்கீதா பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவந்த சூழலில் கடந்த சில காலமாகவே அவர்களுக்குள் மனஸ்தாபம் என்றும்; விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாக தொடங்கியிருக்கிறது.

மலையாளத்தில் வெளியான கங்கோத்ரி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சங்கீதா. அந்தப் படத்துக்கு பிறகு தெலுங்கு, கன்னடத்தில் நடித்த அவர்; தமிழில் காதலே நிம்மதி படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அறிமுகமான படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் அவர் இங்கும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் உதவிக்கு வரலாமா, கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கில் டாப்: தமிழில் அவர் வரிசையாக நடித்துவந்தாலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது என்றால் அது தெலுங்கில்தான். அங்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கத்திலும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார். அந்த மொழி திரையுலகில் நடித்து ஏகப்பட்ட விருதுகளையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சங்கீதாவுக்கு தமிழில் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

Reports have emerged that actress Sangeetha is getting divorced with krish
Photo Credit:

பிதாமகன் சங்கீதா: அந்தவகையில் விக்ரம், சூர்யாவை வைத்து பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் போல்டான கதாபாத்திரத்தை ஏற்றார். அவர் எதிர்பார்த்தபடியே அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. சங்கீதாவுக்கும் பெரிய பெயர் கிடைத்தது. தொடர்ந்து அவர் உயிர், தனம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இது ஒருபக்கம் இருக்க பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

வயது மூப்பா?: சங்கீதா கிரிஷ்ஷை திருமணம் செய்தபோது கிரிஷ்ஷைவிடவும் சங்கீதாவுக்கு வயது அதிகம் என்று தொடர்ந்து கூறப்பட்டுவந்தது. அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் என்னைவிட கிரிஷ்தான் வயதில் மூத்தவர் என்று உறுதிப்படுத்தினார். அதே பேட்டியில்தான், 'தமிழ் திரைத்துறையைவிடவும் தெலுங்கு திரைத்துறைதான் தனக்கு பிடிக்கும்' எனவும் பேசி சர்ச்சையை கிளப்பினார். அவரது இந்தப் பேட்டிக்கு கண்டனங்களும் எழுந்தன.

புதிய சர்ச்சை: இந்நிலையில் சங்கீதாவை சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது அவருக்கும், கணவர் கிரிஷ்ஷுக்கும் சில மாதங்களாகவே மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும்; அந்த மனஸ்தாபம் குடும்பத்துக்குள்ளிருந்து எழுந்திருப்பதால்; அவர் தனது கணவர் கிரிஷ்ஷை பிரியப்போவதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை சங்கீதா கிரிஷ் என்பதிலிருந்து Sangeetha Act என்று மாற்றியிருக்கிறார். அப்படி அவர் மாற்றியதால்தான் இரண்டு பேருக்கும் விவாகரத்து என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதேசமயம் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் எதையும் அவர் நீக்கவில்லை என்பதால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X