ராரா ராக்கம்மா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.. ஹார்ட்டின்களை தெறிக்க விடும் ரசிகர்கள்!
சென்னை:வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் ரேஷ்மா.
தற்போது சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றது.

பிரபலமான ரேஷ்மா
ரேஷ்மா பசுபுலேட்டி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் தான். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேஷ்மாவுக்கு பல ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்த ரேஷ்மாவுக்கு சின்ன திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. விஜய் டிவியில் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது பின்னி பெடல் எடுத்து வருகிறார் ரேஷ்மா.

ராதிகாவாக ரேஷ்மா
பாக்கியலட்சுமி தொடரில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது. பாக்யாவின் கணவர் தான் கோபி என்று தெரியாமலேயே கோபியுடன் பழகி வரும் ராதிகா, உண்மை தெரிந்தவுடன் விலகிச் செல்கிறார். இதன் பிறகு கதை எப்படி செல்லும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். ராதிகா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் ரேஷ்மாவை பலரும் பாராட்டி வருவதுடன் இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாற்றப்படுமா என்று பலர் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.

பிஸியாக இருக்கும் ரேஷ்மா
எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ரேஷ்மா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், மாடர்ன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் அலப்பறைகளையும் ரீல்ஸ் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வரும் நடிகர் ரேஷ்மாவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பலர் ஹாட் இமோஜ்களையும் ஹார்ட்டின்களையும் கொடுத்து வருகின்றனர்.

தெறிக்கவிடும் ரீலிஸ்
அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நடிகை ரேஷ்மா தற்போது டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரா ராக்கம்மா என்ற பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ரேஷ்மாவின் வீடியோ தற்போது இணையத்தை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் மட்டும் இல்லாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் தொடரிலும் நடித்து வருகிறார் ரேஷ்மா.


Click it and Unblock the Notifications











