நான் சர்ஜரி பண்ணா உங்களுக்கு என்ன.. பாடி ஷேமிங் செய்த நெட்டிசனை விளாசிய ரேஷ்மா!

சென்னை : இணையத்தில் உருவ கேலி செய்பவர்களால் நொந்து போன ரேஷ்மா நெட்டிசன்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

விமான பணிப் பெண்ணான ரேஷ்மா பசுபுலேட்டி, நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு வம்சம் சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து புஷ்பா புருஷன் என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார்.

Reshma pasupuleti reply to Netizens for body shaming

பாக்யலட்சுமி சீரியல்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

வேதனையில் ரேஷ்மா: இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, பலர் பாடி ஷேமிங் செய்வது குறித்து வேதனையுடன் பேசி உள்ளார். அதில், இன்றைக்கு நான் ஒருவிதமான வேதனையில் இருக்கிறேன் தனது புகைப்படத்தை பார்த்து பலவிதமான கமெண்ட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. சிலர் நன்றாக இருக்கு என்கிறார்கள், சிலர் என்ன இவ்வளவு குண்டாகிட்ட என்று வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள்.

கிண்டலடிப்பது சரியா: சிலர் கருத்து தெரிவிக்கும் முன் அவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பதை நினைத்துவிட்டு கமெண்ட்டுகளை பதிவு செய்யுங்கள். அது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அதை கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்க மாட்டீங்களா? எனது உடலில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். அதை எல்லாம் உங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.

Reshma pasupuleti reply to Netizens for body shaming

உங்களுக்கு என்ன கஷ்டம்: மேலும், அந்த பகுதிக்கு சர்ஜரி செய்தீங்களா என்று கேள்வி கேட்கிறார்கள். அப்படியே நான் சர்ஜரி செய்திருந்தாலும் அது என் விருப்பம். எனக்கு பிடித்ததை செய்திருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கஷ்டம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் சர்ஜரி செய்வது சாதாரணமாகி விட்டது. நடிகைகள் நாங்க பண்றத விட சாதாரண மக்கள் அதிகமாக சர்ஜரி செய்கிறார்கள். ஆனால் அது வெளியே தெரிவது இல்லை என்று ரேஷ்மா வேதனையுடன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X